For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அ.தி.மு.க. கூட்டணித் தலைவராகிறார் மூப்பனார்!

By Staff
Google Oneindia Tamil News

ப. ராஜநாராயணன்

சென்னை:

டான்சி வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்கால அரசியலை எப்படி எதிர்கொள்வது என்கிற தீவிர யோசனையில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை.தீர்ப்பு இப்படி வரும் என்று எதிர்பார்த்தது தான் என்றும் சொல்கிறார்கள் அ.தி.மு.கவில்.

அ.தி.மு.க. தரப்பில் இப்பொழுது எழுந்துள்ள மிகப்பெரியெ கேள்வி, ஜெயலலிதா தேர்தலில் நிற்பாரா இல்லையா என்பதுதான். ஜெயலலிதா தேர்தலில்நிற்க முடியாமல் போய் அ.தி.மு.க. அதிக இடங்களைப்பிடித்து ஆட்சியமைக்கும் நிலை உருவானால் யார் முதல்வராக வருவார் என்பதும் மிகப்பெரியகேள்வியாக அ.தி.மு.க.வில் எழுந்துள்ளது.

வருகின்ற நவம்பர் 7-ம் தேதிவரை அப்பீலுக்கு நேரம் கொடுத்துள்ளது தனி நீதிமன்றம். உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தண்டனையை ரத்து செய்ய கடும்முயற்சிகளும் அ.தி.மு.க தரப்பில் நடந்துவருகின்றன.

உயர் நீதிமன்றத்திலும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லவும் தீவிரமாக ஆலோசனைகள் நடந்துவருகிறது போயஸ் கார்டனில்.

உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தண்டனைகள் வழங்கப்பட்டால் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடடியுமா? என்ற கேள்வியேவரும்.

உயர் நீதிமன்றமோ, உச்சநீதிமன்றா, தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது, தண்டனை கிடையாது என்று அறிவித்துவிட்டால் ஜெயலலிதாதேர்தலில் போட்டியிடலாம். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

வழக்கம்போல் கருணாநிதிக்கு போட்டியாக ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடியும். நிலைமை தலைகீழானால், தமிழகத்தின் அரசியலே நிச்சயம் ஒருகுலுங்கு குலுங்கும்.

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே ஒரு வித பரபரப்பு உருவாகியிருக்கிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தனியாகவேஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்ல, மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அ.தி.மு.க குஷியாக இருந்த நேரம், டான்சி வழக்குத் தீர்ப்பு தலையில்இடியாக இறங்கியிருக்கிறது. எதற்கும் தயாராக இருந்தாலும் கூட இது அதிமுகவுக்கு மிக அதிர்ச்சியான விஷயம் தான்.

ஆரம்பத்தில், தி.மு.க. வுடன் கூட்டணியில் இருந்த த.மா.காவை, அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்து வைக்க பல முறை அ.தி.மு.க தலைவர்கள் தூதுசென்றார்கள். அப்பொழுது விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம் பற்றி சொல்கிறார்கள் த.மா.கா தலைவர்கள்.

கூட்டணி பற்றி பேச்சுகள் ஆரம்பித்த பொழுதே, ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் அந்த நேரத்தில் பேசப்பட்டது. ஜெயலலிதாமீதுள்ள வழக்குகளில் தண்டனை கிடைத்தால் ஜெயலலிதா தேர்தலில் நிற்கமுடியாமல் போகும்.

அப்படி ஒரு சூழ்நிலை அமைந்துவிட்டால், அ.தி.மு.க கூட்டணிக்கு தலைமைதாங்க ஒரு சிறப்பான நபர் தேவை. அந்த பொறுப்பு உங்களுக்குத்தான் வரும்.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு மூப்பனாரையே தலைவராக்கி, தேர்தலில் வென்றால் மூப்பனாரையே முதல்வராகவும்ஆக்குவோம் என்று அதிமுக தரப்பில் சொன்னார்கள்.

இப்பொழுது அந்தச்சூழ்நிலை உருவாகியிருப்பாகவே கருதுகிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர். ஆனால், ஜெயலலிதாவின் அப்பீல்களுக்குகிடைக்கும் தீர்ப்பு வரை வாயை திறக்காமல் இருப்பது நல்லது என்பதையும் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர்.

தேர்தலில் வெல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவின் ஆதரவு வேண்டும் என்பது தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால் தொடர்ந்து ஜெயலலிதா வாழ்கரேஞ்சிலேயே பேசி வருகின்றனர்.

இந்த வழக்குகின் தீர்ப்பை விட ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி தரும் இன்னொரு விஷயம் தன்னுடன் உள்ள கூட்டணிக் கட்சிகள் நடந்து கொண்ட விதம தான.கூட்டணி கட்சித்தலைவர்கள் எவரும் வெளிப்படையகா டான்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை.

இது இறுதித்தீர்ப்பு அல்ல, மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்கிற ரீதியில் பொதுவாகவே தலைவர்கள் பேசிவருவதும் ஜெயலலிதாவை சற்றுமனம் வருந்தச்செய்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரங்களில்.

தலைவர்களின் நிலை என்ன? ஏன் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும்தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? மூப்பனாரை கூட்டணி கட்சிகளின் தலைவராகக்கலாமா? என்று பல கோணங்களில், ஜெயலலிதாதிராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி, ஜெகவீரபாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்திவருகிறாராம்.

இன்னும் ஒரிரு தினங்களில் அ.தி.மு.கழக கூட்டணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X