இலங்கை தேர்தல்: வெற்றி பெற்றதாக கூறுகிறது சந்திரிகா கட்சி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தங்களது கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அதிபர் சந்திரிகாதலைமையிலான மக்கள் கூட்டணி கூறியுள்ளது.
தேர்தல் வன்முறைகள், முறைகேடுகள் ஆகிய புகார் காரணமாக தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தேர்தல் கமிஷனர் தயானந்ததிசநாயகே தாமதம் செய்து வருகிறார். வாக்குப்பதிவின்போது, கொலைகள், குண்டுவீச்சுகள் உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்கள் நடந்ததுகுறிப்பிடத்தக்கது.
இறுதி தேர்தல் முடிவுகள் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, தேர்தலில் 109இடங்களில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்த இடங்கள் 225.
இந்த எண்ணிக்கையைக் கொண்டு சுயேச்சையாக ஆட்சி அமைக்க முடியாது. இருப்பினும், தமிழ் கட்சியான ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன்ஆட்சியமைக்க முடியும் என்று மக்கள் கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 90 இடங்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ள இடங்களை இடது சாரி மக்கள் விடுதலை முன்னணி மற்றும்தமிழ்க் கட்சிக் பகிர்ந்து கொண்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் மீண்டும் வாக்குப் பதிவு நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. கண்டி முழுவதும் போர்க்களம் போல காணப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் காரு ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இலங்கை தேர்தல் விதிப்படி, நேரடியாக யாரும் எம்.பியாக முடியாது. ஒரு கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகள் விகிதத்தைக் கணக்கில் கொண்டேசீட்டுகள் ஒதுக்கப்படும்.
இலங்கைத் தேர்தல் குறித்து காமன்வெல்த் செயலாளர் டான் மெக்கினான் கூறுகையில், தேர்தலின்போது பெருமளவு வன்முறை வெடித்தது. பல வாக்குச்சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்தன.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தேர்தல் மிகவும் நல்லபடியாகவே நடந்தது என்றார். தேர்தலின்போது பார்வையாளர்களாகசெயல்பட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!