துப்பாக்கிச்சூடு, கத்தி-அரிவாள் வெட்டுடன் நடந்த ம.தி.மு.க. தேர்தல்: ஒருவர் கொலை
நாமக்கல்:
நாமக்கல்லில் ம.தி.மு.க. தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ம.தி.மு.க தேர்தல் நடந்து வருகிறது. நகரச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் திங்கள்கிழமைநாமக்கல்லில் நடந்தது. சேலம் ரோட்டில் உள்ள பொன்னுமாதேவி திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
இந்த தேர்தலில் தற்போது நாமக்கல் மாநகரச் செயலராக உள்ள இளம்பரிதி சின்னுச்சாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்துமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் புகழேந்தி போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க 80 பேர் தகுதி பெற்றிருந்தனர். காலை 10 மணி அளவில் எல்லோரும் திருமண மண்டபத்தில்குவியத் தொடங்கினர். அப்போது மண்டபத்திற்குள் திடீரென கார், வேன் பஸ்களில் வெளியூரிலிருந்து ஆட்கள் வந்துஇறங்கத் தொடங்கினர்.
சினிமா ஸ்டைலில் உள்ளூர் கட்சிக்காரர்களை கேலி செய்வதும், ரெளடித்தனம் செய்வதிலும் இறங்கினர். இவர்களை உள்ளூர்கட்சியினர் எதிர்த்தனர். அவர்கள் என்னுடைய ஆட்கள், அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் என இளம்பரிதி சின்னுச்சாமிகூறினார்.
கடும் வாக்குவாதம் நடந்தது. இந் நிலையில் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் திடீரென ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்துவீசினர்.
இதனால் மண்டபம் அதிர்ந்தது. திடீர் பதட்டம் ஏற்பட்டது. வெடிகுண்டு வீசப்பட்டவுடன் இளம்பரிதியின் ஆட்களும்புகழேந்தியின் ஆட்களும் மோதிக் கொள்ளத் தொடங்கினர்.
குண்டு வெடித்ததில் நாமக்கல் அருகே உள்ள வலையபட்டியைச் சேர்ந்த பழனியாண்டி காயமடைந்தார்.
இதையடுத்து மோதல் வலுவடைந்தது. வேட்டிகள் உருவப்பட்டன. சட்டைகள் கிழிக்கப்பட்டன. மண்டபத்தில் இருந்துசேர்கள் பறந்தன. பல்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு போர் களமாய் மாறியது அந்த மண்டபம். சண்டைமண்டபத்தையும் தாண்டி தெருவுக்கும் வந்தது.
துண்டுகளை பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அப்போது ரிவால்வர் துப்பாக்கி வைத்திருந்தஒருவர் திடீரென சுட்டார். இதையடுத்து அவரை நோக்கி அரிவாளுடன் ஒரு கும்பல் பாயந்தது. கம்புகள் சுழன்றன.
அங்கே குத்துச் சண்டை முதல் குங்பூ சண்டையும் சிலம்பாட்டத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு வரையும்நடந்தது. இந்தச்சண்டையும் சத்தமும் அங்கே கட்சித் தேர்தல் தான் நடக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டின.
ரிவால்வரால் சுடப்பட்டதில் கபாலி (எ) சீனிவாசன், மற்றும் ஒருவர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் நாமக்கல்லில்உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அரிவாள் வெட்டில் கதிர்வேல், செல்வராஜ், தென்னரசு ஆகியோர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இதில்படுகாயமடைந்த தென்னரசு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் உடனடியாக போலீசார் விரைந்தனர். போலீசாரைக் கண்டவுடன் ஒரு கோஷ்டியினர் தப்பிஓட முயன்றனர். அப்போது அவர்களைப் போலீசார் விரட்டிச் சென்றனர்.
இதில் குண்டு வீசிய கும்பல் அம்பாசிடர் கார் ஒன்றை விட்டு விட்டுத் தப்பியது. இந்தக் காரில் இருந்த உருட்டுக் கட்டைகள்மற்றும் கத்தி, அரிவாள்கள் போன்ற கட்சித் தேர்தலுக்கு உரிய சமாச்சாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலிப்படையினரைச் சேர்ந்தவர்கள்என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையொட்டி நாமக்கல்லில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!