For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல் நிலை பாதிப்பால் ராஜ்குமார் மருமகனை விடுவித்த வீரப்பன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ்குமார் கடத்தல் நாடகத்தில் புதிய திருப்பமாக ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜூ மட்டும் விடுவிக்கப்பட்டதுபல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தூதுக்குழுவின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக தான் கோவிந்தராஜூ விடுவிக்கப்பட்டார்என்பது முழுமையாக ஏற்கக் கூடிய உண்மை அல்ல. ஏனென்றால் கோவிந்தராஜூவின் உடல்நலம் பாதிப்பு காரணமாகவேஅவரை வீரப்பன் விடுவித்துள்ளான் என்றே கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் தொட்டகஜனூர் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமார், அவரதுஉறவினர்கள் நாகேஷ், கோவிந்தராஜூ, உதவி இயக்குனர் நாகப்பா ஆகிய நிான்கு பேரை வீரப்பன் கடத்திச் சென்றான்.

கடந்த ஜூலை 30ம் தேதி முதல் அவர்கள் காட்டில் பிணைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களில் நாகப்பாஎன்பவர் மட்டும் செப்டம்பர் 28ம் தேதி காட்டில் இருந்து தப்பி வந்து விட்டார்.

அவர் தப்பி வருவதற்கு முன்பே கோவிந்தராஜூ உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்ட இவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. எனவே கோவிந்தராஜூவை தான் முதலில் விடுவிக்கவீரப்பன் தயாராக இருந்தான்.

ஆனால், நாகப்பா தப்பி ஓடி வந்து விட்டதால் ஏற்பட்ட கோபத்தில் கோவிந்தராஜூவை, அப்போது காட்டில்முகாமிட்டிருந்த நக்கீரன் கோபாலுடன் அனுப்பி வைக்க வீரப்பன் மறுத்து விட்டான்.

கோவிந்தராஜூ வேறு யாருமல்ல. ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் இளைய தம்பி. அவருக்கு தனது மகள் லட்சுமியைமணம் முடித்து கொடுத்துள்ளார் ராஜ்குமார்.

ராஜ்குமார் குடும்பத்திற்கு சொந்தமான வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியை கோவிந்தராஜூதான் நிர்வகித்து வருகிறார். அவரது உடல் நிலை கருதி மனிதாபிமான அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் தான்வீரப்பன் கும்பல் அவரை விடுதலை செய்துள்ளது.

எனவே புதிய தூதுக்குழுவின் பேச்சுவார்த்தை இந்த முறையும் தோல்வியில் தான் முடிந்துள்ளது எனத் தெரிகிறது.

தூதுக்குழுவின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றிருந்தால் ராஜ்குமார் உள்ளிட்ட அவைரையும் வீரப்பன் விடுவித்திருக்க வேண்டும். ராஜ்குமாரை விடுவிக்க அவன் மறுத்து விட்டதற்கு காரணம், அவனதுமுக்கிய கோரிக்கையான கைதிகள் விடுதலையில் எந்த முடிவும் ஏற்படாதது தான்.

இந்த பிரச்னை உச்ச நீதிமன்ற விவகாரமாகி விட்டதால் தங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்ற நிலையை தூதர்கள்மூலம் இரு மாநில அரசுகளும் எடுத்துக் கூறியும், அதை ஏற்க வீரப்பன் மறுத்து விட்டான்.

இந்த வழக்கில் இறுதி முடிவு வரை காத்திருக்கவே வீரப்பனும், அவனது பின்னணியில் உள்ள தமிழ் தீவிரவாதிகளும்விரும்புவதாகத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரே ராஜ்குமார் விடுதலை தொடர்பாக பேச வரும்படிதூதுக் குழுவினருக்கு அழைப்பு அனுப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதோடு ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்னர் அதிரடிப் படையினர் மூலம் வீரப்பனையும், அவனது புதிய சகாக்களையும்முழுமையாக வேட்டையாட இரு மாநில அரசுகளும் ரகசிய ஏற்பாடுகளை செய்து வருவதாக வீரப்பனுக்கு தகவல்கள்கிடைத்துள்ளன.

இதையடுத்து உஷாராகியுள்ள வீரப்பன் அதிரடி நடவடிக்கையை இரு மாநில அரசுகளும் கண்டிப்பாக கைவிட வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ராஜ்குமாரும், மற்றவர்களும் விடுவிக்கப்பட்ட பின்னர் அதிரடிப்படை மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படக் கூடாது என்றுஇரு மாநில அரசுகளும் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்து, அதற்குஏற்பாடு செய்து விட்டு வந்து பாருங்கள் என்று புதிய தூதுக் குழுவினரை அனுப்பி வைத்து விட்டதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

அதன்படி செவ்வாய்கிழமை மாலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து நெடுமாறன் தலைமையலான தூதுக்குழுவினர்பேசுகின்றனர்.

கைதிகளை விடுவித்தே ஆக வேண்டும் என்கிறான் வீரப்பன்- கோவிந்தராஜ் பேட்டி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X