For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கினால்....

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் ஒரு நாள் நிச்சயம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கையில் சிக்க வாய்ப்புள்ளது எனஅமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சிபிஎஸ் டிவி சமீபத்தில் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி, அந் நாட்டில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் குறித்துஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், தீவிரவாதிகள்,தெற்காசியாவுக்கான அமெரிக்கப் படைகளின் தலைவர் ஜின்னி உள்ளிட்ட பலரிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

பேட்டியில் முஷாரப் கூறுகையில், அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை தீவிரவாதிகளிடம் சிக்கவாய்ப்பில்லை. நான் இதை மிக உறுதிபடக் கூறுகிறேன். பாகிஸ்தானில் மதவாத இஸ்லாமியக் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்து இல்லை. பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு அவ்வளவு தான். பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு பிரச்சனை வந்தால்தவிர அதைப் பயன்படுத்த மாட்டோம் என்றார்.

ஆனால், பாகிஸ்தானின் அதிபர் பதவி எந்த அளவுக்கு நிலையானது என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.இதே போல அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளன என முன்பு உறுதியளித்த நவாஸ் ஷெரீப் இப்போது சிறையில்இருப்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் குறித்த கேட்டபோது, தீவிரவாதிகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை என்றார்.

ஆனால், பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் பல தீவிர மதவாத கட்சிகளுக்கும் இடையிலான உறவு குறித்து கேட்டபோதுபதிலளிக்க மறுத்துவிட்டார் முஷாரப்.

பாகிஸ்தானின் முக்கிய மதவாதத் தலைவர்களில் ஒருவரான சமீயுல் ஹக்கிடமும் அந்தத் தொலைக்காட்சி பேட்டியளித்தது.அவர் கூறுகையில், இஸ்லாமிய (தீவிரவாத) அமைப்புளால் நடத்தப்பட்டு வரும் மதரசாக்களை (மதப் பள்ளிகள்) அரசுமூடினால், ஒரே வாரத்தில் ஆட்சியை கவிழ்ததுவிடுவோம் என்றார்.

ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 4,000 மதவாதப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தமதவாதப் பள்ளிகளால் தான் தீவிரவாதம் வளர்கிறது என அமெரிக்கா கருதுகிறது. இங்கு பயிற்சி பெரும் தீவிரவாதிகள்ஒசாமா பின் லேடனிடம் சென்று தஞ்சமடைகின்றனர். அவர்களுக்கு லேடன் ஆயுதப் பயிற்சி அளித்து ஆப்கானிஸ்தான்,காஷ்மீர், செசன்யா ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகிறான்.

அமெரிக்காவின் நெருக்குதலால் இந்தப் பள்ளிகளை மூட முஷாரப் முயன்றால், அவரது ஆட்சியை ராணுவத்துடன் சேர்ந்துகவிழ்த்துவிடுவோம் என்கிறார் சமீயுல் ஹக். எங்கள் ராணுவம் ஒரு முஸ்லீம் ராணுவம். பின் லேடன் இஸ்லாமிய உலகுக்கே ஆப்ரஹாம் லிங்கன் மாதிரி.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் போராளிகளில் 95 சதவீதம் பேர் பாகிஸ்தானில் உள்ள இந்தப் பள்ளிகளில்பயின்றவர்கள் தான் என்றார்.

அதே போல பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் போர்வையில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதியான அகமத்ரஷீத் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் போராடிய 60,000 முதல் 1,00,000 இஸ்லாமிய வீரர்கள் இப்போது பாகிஸ்தானுக்குவந்துவிட்டனர்.

இவர்கள் இப்போது மிகப் பெரிய சக்தியாக விளங்குகின்றனர். இவர்களால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ராணுவத்தால்கூட இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

தெற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கான கமாண்டர் ஆண்டனி ஜின்னி கூறுகையில், விரைவிலேயேபாகிஸ்தானும் ஈரான் போல ஒரு மதவாத நாடாகப் போகிறது. இதைத் தடுக்க முஷாரப்பால் தான் முடியும்.

அதே போல பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள் போய்ச் சேரவும் வாய்ப்புள்ளது. இந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளிடம் ஆயுதங்களும் உள்ளன.

இவர்களிடம் அணு ஆயுதம் சிக்கினால் இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் ஏற்படும். இதைத் தடுக்க முஷாரப்பால் தான்முடியும். எனவே, ராணுவ ஆட்சியாகவே இருந்தாலும் முஷாரப்பை அமெரிக்கா ஆதரிப்பது தான் இந்தப் பகுதியின்எதிர்காலத்துக்கு நல்லது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X