For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: இனி, தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

ப: சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பா.ம.க. என்ன திட்டமிடுகிறதோ!

அதே சமயத்தில் ஜெயலலிதா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தி.மு.க.வுக்கு உதவியாக அமைந்தால், வெற்றி நிச்சயமாகி விடும்.

கே: விடுதலைப் புலி ஆதரவாளர் நெடுமாறனை, தமிழக அரசு தூதுவராக வீரப்பனிடம் அனுப்பியது தவறு என்று த.ம.ா.கா. கூறியுள்ளது பற்றி...?

ப: இதுபற்றி முதல்வர் அளித்துள்ள விளக்கத்தைப் படிக்கவில்லையா? எப்பேற்பட்ட விளக்கம் அது! ஓரே பேட்டியில் அவர் அளித்துள்ள விளக்கங்கள்:

நெடுமாறன் அரசு தூதர் அல்ல ; அவரை நாங்கள் அனுப்பவில்லை. அவர் கோபாலுடன் சென்றிருக்கிறார்..., கோபாலுடன் இணைந்தவுடன் அவர்அரசு தூதராகி விடுகிறார்..., வீரப்பன் கேட்டதால் நெடுமாறன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்; அனுப்பவில்லை. அனுப்பியிருக்கிறார்.அரசு தூதர்இல்லை, அரசு தூதர் ஆகியிருக்கிறார்! என்ன தெளிவு! த.மா.கா.வின் கேள்விகள் முதல்வரை உலுக்கியிருக்கின்றன என்பதற்கு, அவருடைய இந்தமுரண்பாடுகளே சாட்சி!

கே: ஆண்களிடம் இல்லாத குணம் பெண்களிடம் எது உள்ளது?

ப: பெண்களை நம்பாத குணம். இது ஆண்களிடம் இல்லை. பெண்களிடம் உண்டு.

கே: ஊழல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியதற்கும்; எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நரசிம்மராவ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியதற்கும் - உள்ள வித்தியாசம்?

ப: ஜெயலலிதா வழக்கில் - வாங்கியது குற்றமாகியது; நரசிம்ம ராவ் வழக்கில் கொடுத்தது குற்றமாகியது. ஆக கொடுக்கல், வாங்கல்ஆட்சியாளர்களுக்கு ஆபத்தானது.

கே: கூட்டணி ஆட்சியின் நன்மை என்ன?

ப: இதோ போய்விடும் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்.

கே: எம்.எல்.ஏ.க்கள் செய்யும் ஐந்து அல்லது பத்து சதவிகித தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே? இதுபற்றி?

ப: அது எப்படி? சென்ற ஆட்சியாளர்கள் எதிலும் பத்து பர்சென்ட் என்று தவறு செய்ததால்தானே, இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார்கள்.

கே: பி.ஜே.பி., மதவாதக் கட்சி என்றால், பெருகி வரும் ஜாதிக் கட்சிகளுக்கு என்ன பெயர்?

ப: ஜாதி அரசியல் பேசுவது சமூக நீதி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதே.

கே: அரசியலில் இடது சாரி, வலது சாரி என்றால் என்ன அர்த்தம்?

ப: சோஷலிச, கம்யூனிச பாதைகளில் போய், நாசமாகிற போது, நாட்டைப் பார்த்து நாம் சாரி சொல்ல வேண்டியிருப்பதால் - அப்போது நாம் இடது சாரி;முதலாளித்துவ பாதையில் போய் நாசமாகிற போது, நாட்டைப் பார்த்து நாம் சாரி சொல்ல வேண்டியிருப்பதால் - அது வலது சாரி.

கே: வரும் சட்ட மன்ற தேர்தலில் இந்து முன்னணி, அ.தி.மு.க.வை ஆதரிக்கும் என்று கூறியுள்ளது பற்றி ...?

ப: இன்னும் அவர்கள் அந்த அளவுக்குப் போகவில்லை.தி.மு.க.வை எதிர்ப்போம்என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அந்த நிலையும் கூடமாறலாம்.

கே: ஓர் அரசியல்வாதிக்கு எதிரிகள், எதிர்க்கட்சியில் அதிகமா? சொந்தக் கட்சியில் அதிகமா?

ப: எதிரிகள் எதிர்க் கட்சிகளில்தான் இருப்பார்கள். சொந்தக் கட்சியில்

விரோதிகள் அதிகமாக இருப்பார்கள்.

கே: இந்துத்துவா கொள்கையை கைவிட்டதால்தான், குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளதாக - விஸ்வ இந்து பரிஷத்அமைப்பு கூறியுள்ளது பற்றி ...?

ப: நடந்தது முனிசிபாலிட்டி தேர்தல், சாக்கடையை சுத்தம் செய்வதும், குப்பையை அள்ளுவதும், இந்துத்துவா கொள்கையினால்தான் முடியும். அந்தகொள்கையை விட்டவர்களால்தான் இந்தப் பணிகளைச் செய்ய முடியாது என்றா குஜராத்தில் மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள்? என்னால் ஒப்புக் கொள்ளமுடியவில்லை.

கே: தமிழகத்தில் பத்து லட்சம் கொத்தடிமைகள் இருப்பதாக, ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி ...?

ப: அ.இ.அ.தி.மு.க.வில் அத்தனை பேரா இருக்கிறார்கள்? ஓஹோ! சரிதான்.

கே: ராமதாஸ் அ.தி.மு.க. அணியில் சேர்வதாக இருந்தால், ஜெயலலிதா வரவேற்பாரா?

ப: வரவேற்பார். பாண்டிச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமைக்க அ.இ.அ.தி,.மு.க. ஆதரவளித்து விட்டால் - தமிழகத்தில் பெருமளவு சீட் கேட்டுதகராறு செய்யக் கூடாது என்ற நிபந்தனையை ராமதாஸ் ஏற்றால், பா.ம.க. வை ஜெயலலிதா வரவேற்பார். இந்த மாதிரி ஓர் ஏற்பாட்டைராமதாஸ் ஏற்கவும் வாய்ப்புண்டு.

கே: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயரும் என்று நினைக்கிறீர்களா?

ப: தேர்தலுக்குப் பிறகு உயரும்.

கே; ஐதராபாத்தில், உயிரியல் பூங்காவின் உள்ளேயே புலியைக் கொன்றதுடன், அங்கேயே அதன் தோலையும் உரித்த கொடூர சம்பவம் குறித்து ...?

ப: வர வர மனிதன் மிருகமாகி விட்டான். இப்படிச் சொல்வதற்காக மிருகங்கள் என்னை மன்னிப்பதாக.

கே: நடிகர் ராஜ்குமாரை மீட்க, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் பழ. நெடுமாறனை அனுப்பியது யார்?

ப:புலிகளின் நண்பர்களை சிறையிலிருந்து விடுவிக்கும் கோரிக்கை பற்றி காட்டில் வீரப்பனுடன் இருக்கிற புலிகளின் நண்பர்களுடன் பேச, புலிகளின் நண்பரை,புலிகளின் முன்னாள் நண்பரான முதல்வர் அனுப்பியிருக்கிறார்.

சர்வம் புலி மயம் ஜகத். தமிழகத்தில் புலிக் கொடி பறக்கிறது. கேட்டால் ராஜ்குமார் விடுதலையாக வேண்டும் ; அது ஒன்றுதான் குறிக்கோள் என்பார்கள்.

அப்படியானால், கருணாநிதி ராஜினாமா செய்து விட்டு, அரசியலை விட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற நிபந்தனையை வீரப்பன் விதித்தால் - அதைமுதல்வர் ஏற்பாரா? ராஜ்குமார் விடுதலையாவது மட்டுமே குறிக்கோள் என்ற நிலையின் கதி அப்போது என்ன ஆகும்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X