For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் கொலையும், சந்திராசாமியும்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவார் என்றும், 1991-ம் ஆண்டுதேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றும் அரசியல் சாமியார் சந்திராசாமி தன்னிடம்கூறியதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

1991-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்துக்காக ராஜீவ்காந்தி தமிழகம்வந்திருந்தார். மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில்கலந்து கொண்டபோது புலிகளின் மனிதவெடிகுண்டுக்கு ராஜீவ் காந்தி பலியானார்.

ராஜீவ் காந்தி கொலைச் சதி குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் பலரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ரமேஷ் தலால்என்பவர் சாட்சியம் அளித்தார்.

ரமேஷ் தலால், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.விரைவில் வெளியிடப்படவுள்ள இந்த புத்தகத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்களைவெளியிட்டுள்ளார்.

ராஜீவ் கொலை செய்யப்படப் போகிறார் என்றும், 1991-ம் ஆண்டு தேர்தல்ஒத்திவைக்கப்படும் என்றும் தன்னிடம் சந்திராசாமி கூறியதாக புத்தகத்தில் ரமேஷ்தலால் தெரிவித்துள்ளார்.

அதுவும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பே சந்திராசாமி இவ்வாறுதன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் யவத்மல் தொகுதியில் போட்டியிடஇருந்த சமாஜ்வாதி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்காக தேர்தல் நிதிசேகரிக்க சந்திராசாமி வீட்டுக்கு நான் சென்றேன்.

தேர்தலுக்கு அதிக நிதியைச் செலவு செய்யாதீர்கள். அதற்குத் தேவையும் இல்லை.தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று அப்போது சந்திராசாமி தெரிவித்தார்.

அப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று நான் கேட்டேன். ஆனால், அவர் பதில்சொல்ல மறுத்துவிட்டார். நான் தொடர்ந்து வற்புறுத்தினேன்.

அதனால், கோபமடைந்த அவர், அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு பெரியதலைவர் கூட கொல்லப்பட்டலாம் என்று சந்திராசாமி அப்போது கூறினார் என்றதகவலை தனது புத்தகத்தில் ரமேஷ் தலால் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு அக் கொலை தொடர்பாக விசாரணைநடத்த ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டது. இக் கமிஷனால் பலமுறைவிசாரிக்கப்பட்டவர் ரமேஷ் தலால்.

1995-ம் ஆண்டு ரமேஷ் தலால்தான் முதன்முதலாக சந்திராசாமியின் பெயரை ஜெயின்கமிஷன் விசாரணையின்போது வெளியிட்டார்.

தனது வீட்டுக்கு வந்தபோது தான் தெரிவித்த தகவல்கள் குறித்து ஜெயின் கமிஷன்விசாரணையில் தெரிவிக்கவேண்டாம் என்றும் அதற்கு நிறைய பணம் தருவதாகவும்சந்திராசாமி கூறியதாக ஜெயின் கமிஷனில் ரமேஷ் தலால் கூறினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் பற்றியும், அவர்களுடன் தமிழக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்ததொடர்பு பற்றியும் தனது புத்தகத்தில் ரமேஷ் தலால் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாக இருந்த ஒருவர் மதுரையில் உள்ள தனது வீட்டில்விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார்.

உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தாயை இப்போதுதிமுகவில் இருக்கும் ஒரு தலைவர் அடிக்கடி சென்று பார்த்து வந்தார் என்று தனதுபுத்தகத்தில் ரமேஷ் தலால் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலைச் சதியில் விடுதலைப் புலிகளுக்கும், சீக்கிய தீவிரவாதிகளுக்கும்தொடர்பு உள்ளது என்பதையும் ரமேஷ் தலால் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X