For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எரிகிறது மேற்கு ஆசியா: அரபு நாட்டுத் தலைவர்கள் நாளை அவரசக் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருவதையடுத்துஅரபு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமை எகிப்தில் அவசரமாகக் கூடி விவாதிக்க உள்ளனர்.

பல அரபு நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே எகிப்து வந்து சேர்ந்துவிட்டனர். இந்த அவசரக் கூட்டம் 2 நாட்கள்நடைபெறும். இதில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை முறியடிக்க பாலஸ்தீனத்துக்கு உதவுவது குறித்து இந் நாடுகள் திட்டம்தீட்டும் எனத் தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினரும் பாலஸ்தீனர்களும் கடும் மோதலில்ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 இஸ்ரேலியவீரர்கள் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் அவரச கூட்டத்தைக் கூட்டினார். எகிப்தின் ஷார்ம்-எல் சேக் தீவில்அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் இஸ்ரேல் பிரதமர் இகூத் பராக், பாலஸ்தீனத் தலைவர் யாசர்அராபத் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால், இதில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை. அமைதிப்பேச்சுவார்த்தைக்கு வசதியாக இரு தரப்பினரும் வியாழக்கிழமைக்குள் (48 மணி நேரத்துக்கு) மோதலைநிறுத்துவது என்று மட்டும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் பாலஸ்தீனர்களின் பயணத்தை தடை செய்யும் சாலைத் தடுப்புகளை இஸ்ரேல்விலக்கியது. இதனால் பாலஸ்தீனியர்கள் ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு செல்ல வழி ஏற்பட்டது. காசாவில்உள்ள பாலஸ்தீன விமான நிலையம் 10 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனாலும் மோதல் நிற்கவில்லை. தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இஸ்ரேல் கைப்பற்றிய காசா ஸ்டிரிப்,வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என யாசர் அராபத் திட்டவட்டமாகக்கூறிவிட்டார். இல்லாவிட்டால் இந்தப் பகுதியில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை எனவும் அறிவித்துவிட்டார்.

இஸ்ரேலும் தனது பிடிவாதத்தில் தீவிரமாக உள்ளது. வெள்ளிக்கிழமையும் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். நெப்லஸ் என்ற இடத்தில் இரு இஸ்ரேலிய கிராமத்தினரை பாலஸ்தீனர்கள் கொன்றனர். அதே போலகாசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மீது பாலஸ்தீன வாலிபர்கள் கற்களை வீசித் தாக்கினர்.

மிகக் கடுமையான சண்டை நடந்த நெட்சரிம் பகுதியில் பாலஸ்தீனப் பெண்கள் இஸ்ரேலுக்கு எதிரான பேரணிநடத்தினர். பெத்லகேமில் உள்ள யாசர் அராபத்தின் தலைமை அலுவலகத்தை இரு குண்டுகள் தாக்கின. இதுஇஸ்ரேலின் வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது. இது தவிர ஹெப்ரான் பகுதியிலும் பலத்த மோதல் நடந்துவருகிறது.

அதே நேரத்தில் சி.ஐ.ஏ. தலைமையில் பாலஸதா, இஸ்ரேலிய ரகசியப் படைப் பிரிவுகள் சந்தித்துப் பேச்சு நடத்திவருகின்றன. பாலஸ்தீன தீவரவாத அமைப்புகள் தான் இப்போது இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை தூண்டிவிட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பாலஸ்தீன அரசுகைது செய்து வருகிறது. சமீபத்தில் தான் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் விடுவிக்கப்பட்டார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தான் அரபு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. 1996ம் ஆண்டுக்குப் பின் நடக்கும் அரபுநாடுகளின் கூட்டம் இது தான். ஆனால், கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு கூட்டத்திலும் அரபு நாடுகளுக்குள்ளேயேமோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஒருமனதாக எந்த முடிவும் எடுத்ததில்லை.

இப்போதும் அதே நிலை தான் ஏற்படும் எனத் தெரிகிறது. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையே கூடாது எனலெபனான் கூறியுள்ளது. அதே போல லிபிய அதிபர் கடாபியும் பேச்சுவார்த்தை வேஸ்ட் என்கிறார். இஸ்ரேலுக்குஎதிரான தாக்குதல் திட்டத்தை தயார் செய்யாமல் வெறும் பேச்சு நடத்துவதால் பயனில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து எகிப்து வந்துள்ள அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒரு கூட்டம் நடத்தினர். அதில்,நமக்குள் உள்ள பிரச்சனைகளை முதலில் தள்ளி வைத்துவிட்டு உருப்படியாக ஏதாவது செய்வோம் எனமுடிவெடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X