For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேல் மோதல்: மேலும் 10 பாலஸ்தீனர்கள் பலி- அரபு நாடுகள் அவசரக் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

ஜெருசலேம்:

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமாகியுள்ளது. அங்கு நடந்த புதிய வன்முறைச் சம்பவங்களில் மேலும் 10பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதுவரை மோதலில் இறந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 115யைத்தாண்டிவிட்டது.

மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தலைமையில் எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டமுடிவை பாலஸ்தீன அரசு கண்டு கொள்ளவில்லை. அதனால், தான் மோதல் தொடர்கிறது என இஸ்ரேல் கூறுகிறது.

48 மணி நேரத்தில் சண்டையை நிறுத்துவது என்று எடுக்கப்பட்ட முடிவை பாலஸ்தீனம் அமலாக்கவில்லை.எகிப்தில் நடக்கும் அரபு நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னும் வன்முறை தொடர்ந்தால்,என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை ராணுவத்துக்கு சொல்வோம் என்றார்.

பாலஸ்தீனம் குற்றச்சாட்டு:

ஆனால், வன்முறையை இஸ்ரேல் தான் தூண்டிவிட்டு வருவதாக பாலஸ்தீனம் குற்றம் சாட்டியுள்ளது.பாலஸ்தீனர்களின் பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து கொண்டு கண்மூடிதனமாக சுட்டு வருகிறது. இஸ்ரேலியஊடுருவல்காரர்களும் பாலஸ்தீனத்துக்குள் தொடர்ந்து நுழைந்து இடங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள்.இவர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் பாதுகப்புத் தருகிறது என பாலஸ்தீன பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் சயேப்எரிகத் கூறினார்.

அமைதிப் பேச்சுவார்த்தையை திட்டமிட்டு கொன்று வருகிறது இஸ்ரேல். இதில் அந்நாடு தீவிரமாகவே இருக்கிறதுஎன்றார்.

வெஸ்ட் பேங்க் பகுதியில் நெப்லஸ் நகரில் இஸ்ரேலிய யூதர்கள் ஊடுவியதை எதிர்த்த பாலஸ்தீனர்கள் மீதுஇஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய ராணுவ ஹெலிகாப்டர்களும் குண்டுகளை வீசின.

பாலஸ்தீன போராளிகள் துப்பாக்கிகளால் திருப்பிச் சுட்டனர். ஆனால், 7 மணி நேர இஸ்ரேலிய தாக்குதலில் 5பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக நேற்று முன் தினம் கொல்லப்பட்ட பாலஸ்தீனர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்நடத்திய தாக்குதலால் வன்முறை வெடித்தது.

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இஸ்ரேல் அதிபர் பராக், பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் ஆகியோருடன்தொலைபேசியில் பேசினார். சண்டையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தப் பிரச்சனைக்கு தீரிவு காண அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன்,ஐரோப்பிய யூனியன் ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம்:

இதற்கிடையே பாலஸ்தீனர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைக் கமிஷன் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்த பகுதிகளை இஸ்ரேல் உடனே திரும்ப ஒப்படைக்க வேண்டும்என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

அமைதியை கெடுப்பது இஸ்ரேல் தான்- அராபத்

கிளின்டனுடன் தொலைபேசியில் பேசிய அராபத், அமைதியை நிலை நிறுத்த நான் எவ்வளவோ முயற்சிக்கிறேன்.ஆனால், இஸ்ரேல் தான் நிலைமையை மோசமாக்கி வருகிறது என்றார்.

1991ம் ஆண்டில் ஒப்புக் கொண்டபடி பாலஸ்தீனத்திடமிருந்து கைப்பற்றிய நிலத்தை இஸ்ரேல் திரும்ப வழங்கவேண்டும் என்று கோரி இந்த வன்முறை நடக்கிறது.

இந் நிலையில் பாலஸ்தீனத்துக்கு உதவுவது தொடர்பாக அரபு நாடுகள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில்அவசரமாகக் கூடி விவாதிக்கின்றன. நாளையும் தொடரும் இந்தக் கூட்டத்தில் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சிரியாவும் லிபியாவும் இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்து வருகின்றன. இஸ்ரேலுடன்வர்த்தகத்தை நிறுத்தவும் இஸ்ரேலியர்களுடன் கை குலுக்குவதை நிறுத்தவும் சிரியா கோருகிறது.

இஸ்ரேலை தாக்க வேண்டும் என்கிறது லிபியா. இந் நிலையில் இந்த அரபு நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்படும்முடிவு மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது.

எரிகிறது மேற்கு ஆசியா: அரபு நாட்டுத் தலைவர்கள் நாளை அவரசக் கூட்டம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X