For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ்-வாழப்பாடி: விஸ்வரூபம் எடுக்கிறது ரூ. 2.5 கோடி விவகாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருப்பதுகுறித்து சி.பி.ஐ, மற்றும் வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் எனறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் தொலைபேசிஆலோசனைக்குழு, மற்றும் சென்சார்போர்டு ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளேன்.

தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சித் தலைவராக வாழப்பாடிராமமூர்த்தி உள்ளார். அவரது மனைவி பள்ளி ஆசிரியையாக உள்ளார்.மத்திய அமைச்சராகவும், பல முறை எம்.பியாகவும் வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார்.

இவருக்கு வேறு எந்த வழியிலும் வருமானம் கிடையாது. மத்திய அமைச்சராக இருந்த போது இவர் பெருமளவில் சொத்துசேர்த்ததாக குற்றுச்சாட்டு உள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் ஒண்ணறை கோடி ரூபாய்க்கு ஒரு கட்டிடத்தை வாங்கிஇருபத்தைந்து லட்ச ரூபாய் செலவில் அதை புதுப்பித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் சீட் பெறுவதற்காக இரண்டரை கோடிரூபாய் ராமதாசுக்கு கொடுத்ததாக வாழப்பாடி ராமமூர்த்திகூறியுள்ளார். இவரது பேட்டி பல பத்திரிக்கைகளிலும் வெளி வந்துள்ளது. இது குறித்து வருமான வரித்துறையில் நான்விசாரித்தேன். இந்த பணம் கொடுத்த விவரம் பற்றி வருமான வரித் துறையினரிடம் வாழப்பாடி ராமமூர்த்தி எதுவும்தெரிவிக்கவில்லை.

இவரது வருமானம், பினாமி முதலீடுகள், அறக்கட்டளையின் நிதி பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு இரண்டரை கோடிரூபாயை வாழப்பாடி ராமமூர்த்தி அளித்தது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ,மற்றும் வருமான வரித்துறைக்கு உத்திரவிடவேண்டும்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது குறித்தும் விசாரிக்க உத்திரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.

நான் ராமதாசுக்கு ரூ. 2.5 கோடி தேர்தல் செலவுக்குக் கொடுத்தேன் என வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதை இதுவரை ராமதாஸ்மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸ்-வாழப்பாடி ராமமூர்த்தி பிரச்சனை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கருணாநிதிக்குதலைவலியாகவே இருந்து வருகிறது.

தன்னை ஓரம் கட்டுவதற்காக வாழப்பாடியை கருணாநிதி தான் தூண்டிவிட்டு வருவதாக ராமதாஸ் கருதுகிறார்.

இந்த புதிய வழக்கில் நீதிமன்றம் தரப் போகும் தீர்ப்பில் ஜெயலலிதா தவிர்த்து பிற தலைவர்களின் பண பலம் குறித்தவிரைவிலேயே வெளிவர வாய்ப்புள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X