ஜாதிக் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து .. நல்லகண்ணு
திருச்சி:
ஜாதிக் கட்சிகள் தோன்றுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று திருச்சியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நல்லகண்ணு கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு திருச்சியில்நிருபர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
ஜாதிக்கட்சிகள் தற்பொழுது திடீரென்று தோன்றி உள்ளன. இதற்குப் பின்னணிஇருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. ஜாதிக் கட்சிகள் வளர்ந்தால்தமிழர்கள் என்ற அடையாளம் மறைந்து விடும்.
பால் சங்கங்களுக்கு பால் வழங்கிய வகையில் விவசாயிகளுக்கு 380 கோடி ரூபாய்பாக்கியுள்ளது. ஆனால் இருபது கோடிரூபாய்தான் பட்டுவாடா செய்யப்போவதாகஅறிவித்திருக்கிறார்கள். மற்ற பாக்கி பணத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்.
அ.தி.மு.கவுடன் எங்கள் கூட்டணி தொடர்கிறது. அந்த கூட்டணி நீடிக்க வேண்டும்என்று விரும்புகிறோம்.
வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்று 84 நாட்கள் ஆகிறது. அவர் பத்திரமாகதிரும்ப வேண்டும். அவர் வந்த பிறகு தான் இது குறித்து நாங்கள் கருத்து கூற முடியும்.தீவிரவாதி என்றால் நேருக்கு நேர் மோத வேண்டும். இப்படி ஆட்களைகடத்தக்கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடுகளைகொண்டுள்ளது என குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுமாநில கட்சிகள் பலம் பெற்றன. எனவே மாநிலத்தில் உள்ள நிலவரத்திற்கு ஏற்பநாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்.
காங்கிரசுக்கும், காந்திக்கும் தொடர்பு இருப்பது போல் பாரதீய ஜனதாவுக்கும்,ஆர்.எஸ்.எஸ்க்கும் தொடர்பு இருப்பதாக அத்வானி கூறியிருக்கிறார். இது நாட்டுக்குஆபத்து. பாரதீய ஜனதாவின் எதிர்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றுநல்லகண்ணு நிருபர்களிடம் கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!