97 வாரங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவீதம் அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே: கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக, சந்தன வீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், தமிழக மற்றும் கர்நாடகஅரசுகள் பயந்து, சரணடைந்து விட்டதாக உச்ச நீதிமன்றம், தமிழக, கர்நாடக அரசுகளை கடுமையாகச் சாடியுள்ளது குறித்து ...?

ப: முதலில் சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம் தேவையில்லாத உக்ரம் கொண்டது - என்றுதான் தோன்றியது. இப்போது, இன்னும் கூட சொல்லியிருக்கலாம்என்று தோன்றுகிறது. எவ்வளவுசொன்னாலும், உறைக்கவில்லையே!

கே: பிரதமரின் மூட்டு அறுவை சிகிச்சையை பத்திரிக்கைகள் இந்த அளவுக்கு பெரிது படுத்துவதேன்?

ப: நமது சமுதாயத்திற்கு நிதானம் இல்லை ; எப்போதுமே, ஒரு நிரந்தரமான போதையில் இருக்கிறது.

கே: தி.மு.க. இப்போது இந்து ஆதரவுக் கட்சியா? இந்து விரோதக் கட்சியா?

ப: தமிழகத்திலா? டெல்லியிலா? டெல்லியில் தி.மு.க. இந்து விரோதக் கட்சியல்ல.

கே: நாயை நன்றியுள்ள பிராணி என்கிறோம். அதையே சில சமயம் நன்றி கெட்ட நாய் என்றும் திட்டுகிறார்களே! இது முன்னுக்குப் பின் முரணாகஉள்ளதே?

ப: நாய்கள் இயற்கையிலேயே நன்றியுணர்வு உள்ள பிராணிகள் என்பதால், அவற்றிடையே ஒரு நாய் நன்றி கெட்டு நடந்து கொண்டால்,அது மிகக்கேவலமாகத் தெரியும் ; அதனால் நன்றி கெட்ட நாயே என்கிறோம்.

மனிதன் பொதுவாக நன்றி கெட்டவன் என்பதால், ஒரு மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கும் போது, அது விசேஷ கண்டனத்துக்குரியதாகத்தெரிவதில்லை.

நன்றி கெட்ட மனிதா என்று சொல்லத் தேவையில்லை. மனிதா என்றாலே போதும்,

கே: பூர்வீகத்தில் தாங்களும் இந்துக்கள்தான் என்பதை முஸ்லிம்களும், கிறஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்சுதர்சன் கூறியுள்ளது பற்றி, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இது பற்றியும், சர்ச்கள் இந்திய சர்ச்களாகவே இயங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது பற்றியும், எனது கருத்துக்களை பின்னர்விரிவாகக் கூறுகிறேன்.

கே: 2006-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும்என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளாரே?

ப: அமைச்சரானவுடன், தலை கொஞ்சமாவது சுழலாதா? சரியாகி விடும் ; கவலை வேண்டாம்.

கே: இலங்கையின் தேர்தல் முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததா?

ப: சந்திரிகா அணி இன்னும் கொஞ்சம் நல்ல மெஜாரிட்டி பலம் பெறும் என்று எதிர்பார்த்தேன். இப்படி உன்னைப்பிடி, என்னைப் பிடி, என்ற அளவுக்கு முடிவுஅமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

கே: கிரிக்கெட் சூதாட்டத்தில் கபில்தேவ் குற்றமற்றவர் என்பது தெரிய வந்துள்ளதே?

ப: அதற்கு முன்பே அவர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு முன் குற்றச்சாட்டு வந்தது ; ராஜினாமாவுக்குப்பின் அது போய் விட்டது ,என்னவோ போல் இருக்கிறது. திருப்தி இல்லை.

கே: பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ...?

ப: பீகார் நிலைமைக்குத் தீர்வு - நான் முன்பே கூறியதுதான் ; அங்கு எமர்ஜென்சி கொண்டு வரப்பட வேண்டும்.

கே: விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்த வி.பி.சிங் ஆரம்பித்து விட்டது பற்றி ...?

ப: பாவம் விவசாயிகள். சோதனை மேல் சோதனை.

கே: சிரிமாவோ பண்டாரநாயகாவின் திடீர் மறைவு குறித்து?

ப: அவருடைய குடும்பத்தாருக்கு நமது அனுதாபங்கள் உரித்தாகுக.

கே: மு.க. ஸ்டாலின் வீட்டில் கூட சாமி அறை உள்ளதே என்று திருவாரூர் கே. தங்கராசு (தமிழ்நாடு திராவிடர் கழகம்) ரொம்பவும்ஆதங்கப்படுகிறாரே? ஏன்?

ப: இது என்ன எண்ணம்? யாருமே உருப்படக் கூடாதா?

கே: நீதிமன்ற தீர்ப்பு பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்தில் அடுத்து எம்,ஜி.ஆர். ஆட்சி அமைவது உறுதி என்று ஜெயலலிதா அடித்துச்சொல்கிறாரே? இந்த மனோதிடம் வேறு எந்த அரசியல்வாதிக்கு வரும்?

ப; யாருக்கும் வராது. சென்ற முறை பா.ஜ.க. அரசைக் கவிழ்த்த போது, அடுத்த ஆட்சி பதவியேற்கும் ; நானே கூட பிரதமர் ஆகலாம் என்று கூறிமனோதிடத்தைக் காட்டி பழக்கப்பட்டவருக்குத்தான் வரும்.

கே: சந்தன கடத்தல் வீரப்பன், தான் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் இனிமேல் தமிழக, கர்நாடக அரசுகளின் அதிரடிப் படைகளை அனுப்பக் கூடாது என்று உத்திரவாதம் கேட்பது பற்றி ... ?

ப: நியாயம் தானே? ராஜ்குமார் விடுதலைக்கான முயற்சிகள் என்ற பெயரில் நடப்பது உண்மையில், வீரப்பன் விடுதலைக்கான முயற்சிகள் தானே?அப்படியிருக்க அனாவசியமாக போலீஸ் எதற்கு?

கே: திருநாவுக்கரசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிட்டாததற்கு தி.மு.க.தான் காரணமா?

ப: தி.மு.க.வும் காரணமாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

கே: அடுத்த முறை தூதுக் குழுவினர், காட்டிலிருந்து ராஜ்குமாரை மீட்டு வந்து விடுவார்களா?

ப: இவர்களெல்லாம் ஏற்கனவே என்ன பேசி முடித்து வைத்திருக்கிறார்களோ - அது நடக்கும். நாடகத்தை எழுதிய அவர்களுக்குத்தான், அதன்க்ளைமாக்ஸ் காட்சி என்ன என்பது தெரியும். என்னைக் கேட்டு என்ன பயன்.

கே: நான் தங்கள் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அறிவு இல்லை.

ப: வேலைக்கு வேண்டிய தகுதி உங்களுக்கு இருக்கிறது. சரி. ஆனால் வேலை காலி இல்லையே.

கே: வால்டர் தேவாரம், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த கருத்துக்கள் எப்படி?

ப: திருப்தியாக இருக்கிறது. ஆனால் என்ன பயன்? இவ் விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் தமிழக அரசுக்கு உறைக்காது போலிருக்கிறதே.

கே: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் ; கொடுத்தாலும் ஏற்க மாட்டோம் என்று கூறும் ராமதாஸ், மத்திய ஆட்சியில் மட்டும்பங்கு வகிப்பது ஏன்?

ப: மத்தியில் பங்கு வகிப்பது இருக்கட்டும். பாண்டிச்சேரியில் கூட ஆட்சி வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை என்பதுதான் ஜெயலலிதாவின்கவனத்திற்குரியது.

கே: ஜெயலலிதா மற்றும் பலர் பெற்றிருக்கும் தண்டனைக்கு, பாராட்டுக்குரியவர் சுப்ரமண்யம் ஸ்வாமியாயா? சென்னா ரெட்டியா?

ப: ஜெயலலிதா பெற்ற தண்டனைக்கு யாரையாவது பாராட்டித்தான் தீர வேண்டும் - என்று நீங்கள் நினைத்தால், சசிகலாவைப் பாராட்டுங்கள்,அர்த்தமிருக்கும்.

கே: ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியில், சாம்பியன் பட்டத்தை இந்தியா கோட்டை விட யார் காரணம்?

ப: குறிப்பாகச் சொல்வதானால் - இரண்டு ரன் அவுட்களுக்க்குக் காரணமாகி, அது தவிர வெங்கடேஷ் பிரசாத்துக்கு தனது ஓவர்களைப் பூர்த்திசெய்கிற வாய்ப்பளிக்காமல் இருந்த கஙகூலி ஒரு காரணம் ; மெதுவாக ரன் எடுத்து பல ஓவர்களை வீணடித்த திராவிட் ஒரு காரணம்.

பொதுவாகச் சொல்வதானால், நமது கிரிக்கெட்டின் லட்சணம் காரணம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற