For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாமிமலை முருகனுக்கு கும்பாபிஷேகம்

By Staff
Google Oneindia Tamil News

Swamimalai Muruganசுவாமிமலையில் 10.11.2000, வெள்ளிக்கிழமையன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் நான்ாகவது படை வீடு சுவாமிமலை. சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில்அமைந்துள்ளது. தென்புறம் காவிரியும், அரசலாறும் பாய்ந்து சுவாமிமக்ைகு குளுமையும் வளமும் சேரக்கின்றன.

இந்த திருத்தலத்தில் தான் சிறுவனாக இருந்த முருகன் தன் தகப்பன் சிவனுக்கே பிரணவத்தின் மந்திரத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறது. அதனால் இங்குகோயில் கொண்டுள்ள முருகனுக்கு தகப்பன் சாமி என்ற பெயரும் உண்டு.

இந்த கோயில் 60 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள 60 படிகளும் ஒரு யுகத்தின் 60 படிகளை குறிப்பதாகும்.

28- வதுபடியில் நடுச்சுற்றில் சிவ பெருமானுக்கு முருகன் உபதேசிக்கும் காட்சி கதையாக அழகுற விளக்கப்பட்டுள்ளது.

32 - வது படிக்கு அருகே நேத்திர விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது.

முருகன் தகப்பன் ஸ்வாமியானதற்கான கூறப்படும் கதை:

ஒரு நாள் பாலகன் முருகன் கைலாசத்தின் வாயிலில் விளையாடிக் கொண்டிருந்தார். சிவபெருமானை தரிசிக்க வந்தவர்கள் அனைவரும் வேலவனை நலம் விசாரித்துபின் சென்று பரமனை தரிசித்தனர். ஆனால் அப்போது அங்கு வந்த பிரம்மன் சிங்கார வேலனை கண்டு கொள்ளாமல் சென்று விடவே, கடும் கோபம்கொண்டு பிரம்மனை அழைத்து வேதங்களை கூறும்படி கூறினார்.

பிரம்மன் ஓம் என ஆரம்பிக்கவும் முருகன் நிறுத்தி ஓம் என்பதன் பொருளைக் கேட்கவும், பிரம்மன் திகைத்து நின்றார்.

பிரணவத்தின் பொருள் தெரியாமல் எப்படி படைப்புத் தொழில் எவ்வாறு செய்ய முடியும் என கேட்டு பிரம்மனை சிறையில் அடைத்து படைப்புத் தொழிலைதானே மேறகொண்டான் வள்ளிமணாளன்.

சிவபெருமான் பிரம்மாவை விடுவிக்குமாறு முருகனை பணித்தார். பிரம்மனை விடுதலை செய்ததும் பிரம்மனால் விளக்க இயலாத பிரணவத்தின் பொருளைதனக்கு விள்ககுமாறு சிவன் கேட்கவும், முருகன் தந்தைக்கே ஆசானாகி பிரணவத்தின் பொருளை உபதேசித்த இடம் சுவாமிமலை. தகப்பனுக்கே முருகன்உபதேசித்ததால் அவர் தகப்பன் சுவாமி ஆனார் முருகப் பெருமான்.

இந்த புகழ் பெற்ற கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. அதில் வஜ்ர தீர்த்தம் என்னும் தீர்த்தத்திலிருந்துதான் பகவானுக்கு அபிஷேக நீர் எடுத்துவரப்படுகிறது.

தந்தைக்கு உபதேசம் செய்த தகப்பன் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 10-ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை நடக்கிறது. இங்கு பக்தர்கள் பக்திபரவசத்துடன் காவடி எடுத்து வருவது தினந்தோறும் காணக்கிடைக்கும காட்சியாகும்.

இரவில் முருகன் தங்க ரதத்தில் உள் பிரகாரத்தில் உலா வரும் காட்சிநமக்கு அருள் வழங்கும் முருகனை காணக்காண மெய்மறந்து பக்தர்கள் போடும்பக்தி கோஷம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவனை கண்டு களித்து. தரிசித்து அவனின் அளவிலா அருளைப் பெறுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X