For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்குமாருக்கு பொன்னாடை, நினைவுப்பரிசு வழங்கிய வீரப்பன்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

ராஜ்குமாரை விடுவித்த சந்தனக் கடத்தல் வீரப்பன், அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தான். அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கி ஆரத்தழுவிக் கொண்டன்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரையும், மற்றொருபிணைக்கைதி நாகேஷையும் புதன்கிழமை மீட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்ட பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலைசத்யமங்கலம் காட்டுக்குச் சென்றனர்.

கோபால் 4 முறைக் காட்டுக்குச் சென்றும் ராஜ்குமாரை மீட்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால், நெடுமாறன் தலைமையிலான புதிய தூதர் குழுஅமைக்கப்பட்டது.

புதிய தூதுக்குழுவில் சண்முக சுந்தரம்:

பெங்களூர் தமிழர் பேரவையின் நிறுவனர் ப.சண்முகசுந்தரமும் புதிய தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்தார். இவர் கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவராக இருந்து வருகிறார். இவர் கர்நாடக மக்களால் பெரிதும் உயர்வாக மதிக்கப்படும் தமிழர் தலைவர்களில் ஒருவர்.

காட்டுக்குச் சென்று வீரப்பனைச் சந்தித்த அவர்கள் தடா கைதிகள் விடுவிப்பதற்கு தனி நீதிபதி அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்துத்தெளிவாக எடுத்துக் கூறினார்கள்.

நெடுமாறன், தடா கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி கூறினார். கர்நாடகத் தமிழர்களின் நிலை குறித்துசணமுகசுந்தரம் வீரப்பனுக்கு தெளிவாக விளக்கினார்.

இதையடுத்து வீரப்பன் தனது பிடிவாதத்திலிருந்து தளர்ந்தார்.

வீரப்பனுக்கு ராஜ்குமார் பரிசு:

நெடுமாறனின் பதிலில் திருப்தியடைந்த வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க சம்மதம் தெரிவித்தார். காட்டுப் பகுதியில் ராஜ்குமாரை பொன்னாடைபோர்த்தி வழியனுப்பி வைத்தார் வீரப்பன்.

வீரப்பன் தனக்குப் பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்ததால் மகிழ்ச்சியடைந்த ராஜ்குமார் வீரப்பனுக்கு நினைவுப்பரிசு அளித்தார்.

ஈரோட்டில் ராஜ்குமார்:

விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் கோவையில்மருத்துவமனையில் தங்கி இருப்பதாக செய்திகள் வந்தன. அவரது பாதுகாப்பு கருதி இரு மாநில அரசுகளும் அவர் தங்கியுள்ள இடத்தை அறிவிக்காமல்விட்டுவிட்டன.

இப்போது ஈரோட்டில் பண்ணை வீட்டில் இருப்பதாகக் கூறப்படும் ராஜ்குமாருடன் அவரது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர்.

ஆனந்தக் கண்ணீரில் குடும்பம்:

ராஜ்குமார் மனைவி பர்வதம்மாள், மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார், மருமகன்கள் ராம்குமார்,எஸ்.ஏ.கோவிந்தராஜ், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியோர் ராஜ்குமார் தங்கியுள்ள பண்ணை வீட்டில் உள்ளனர்.

காட்டிலிருந்து விடுதலையான பின் நடிகர் ராஜ்குமார் தனது குடும்பத்தைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களதுமகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

தொடரும் மர்மம்:

நடிகர் ராஜ்குமார் எப்போது? எங்கிருந்து விடுவிக்கப்பட்டார் என்பவை குறித்த விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம்வனப்பகுதியில் நெடுமாறனை சந்தித்த வீரப்பன், அவரிடம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ராஜ்குமாரை ஒப்படைத்தார்.

அந்த இடத்திலிருந்து 3 மணி நேரம் கழித்தே நெடுமாறன் குழு புறப்பட வேண்டும் என்று கூறி காட்டுப் பகுதிக்குள் வீரப்பன் மறைந்து விட்டார் என்றுசென்னைக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திரும்புகிறார் நெடுமாறன்:

நடிகர் ராஜ்குமாரை, பெங்களூருக்கு அனுப்பி வைத்துவிட்டு வியாழக்கிழமை பிற்பகல் சென்னை திரும்புகிறார் நெடுமாறன். சென்னை திரும்பியதும்,நெடுமாறனும், நக்கீரன் ஆசிரியர் கோபாலும் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X