For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டுக்குள் அதிரடிப்படை அனுப்ப நெடுமாறன் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையை அனுப்பக் கூடாது என தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் நிருபர்களிடம் நெடுமாறன் கூறுகையில், இப்போதுள்ள நிலையில் அதிரடிப்படையின் நடவடிக்கை தேவையில்லை. கன்னடர்-தமிழர் ஒற்றுமையில் புதிய அத்தியாயம் எழுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அதிரடிப்படை நடவடிக்கையில் இறங்குவது இந்த நல்லுறவுக்குத் தான் பங்கும் ஏற்படும்.

அதிரடிப்படையினரால் மலைப்பகுதி கிராம மக்களுக்கு ஏற்பட்ட அட்டூழியங்கள் குறித்து சதாசிவம் கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. இப்போது இந்தப் படையினரை மீண்டும் காட்டுக்குள் அனுப்பினால் விசாரணையும் பாதிக்கப்படும்.

வீரப்பனுக்கு உறுதிமொழி:

கர்நாடகத்தில் சிறையில் உள்ள 51 தடா கைதிகளையும், தமிழ்நாட்டில் சிறையில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகளையும் விடுவிக்கசட்டப்படி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என நான் வீரப்பனுக்கு உறுதிமொழி அளித்தேன். இதன் பின்னர் தான்ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் ஒப்புக் கொண்டான்.

முதலில் இவர்களை விட்டால் தான் ராஜ்குமாரை விடுவேன் என வீரப்பன் பிடிவாதமாகத்தான் இருந்தார். ஆனால், நான் உறுதிமொழி கொடுத்ததையடுத்து ராஜ்குமாரை விடுவிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் பிரச்சனையில் வர்த்தகமோ, வியாபாரமோ ஏதும் நடக்கவில்லை. யாரும் எதையும் கொடுத்து வாங்கவில்லை.மனிதாபிமான அடிப்படையில் தான் இந்தப் பிரச்சனையில் இறங்கினோம். வீரப்பனும் மனிதாபிமானத்தோடு ராஜ்குமாரைவிடுவித்தார்.

காட்டில் தன்னிடம சிக்கியிருந்த பிணைக் கைதிகளுக்கு வீரப்பன் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. தன்னால் என்ன வசதிஎல்லாம் செய்து தர முடியுமோ அதைச் செய்து தந்திருக்கிறார். அவரது மனிதாபிமானத்துக்கு இதைவிட வேறு என்ன சான்றுவேண்டும்.

பெண்களை கற்பழித்த அதிரடிப்படை:

அதிரடிப்படை சும்மா இருக்கும் வரை வீரப்பனும் யாரையும் கடத்திச் செல்ல மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப்படையால் 90 அப்பாவி கிராம மக்கள் கொல்லப்பட்டிருக்கிறர்கள். 60 பெண்கள் வரைகற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 300 பேரை அடித்தே கை, கால்களை உடைத்து நிரந்தமாக ஊனமாக்கியிருக்கிறார்கள்.மேலும பலரும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், மீண்டும் போலீசாரால் தங்களுக்கு தொல்லை வரும் என்று அஞ்சி அவர்கள் சதாசிவம் கமிஷனில் ஆஜராகபயப்படுகிறார்கள். இந்த மக்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டு, கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருணாநிதிக்கும் கோரிக்கை:

காலையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து ராஜ்குமாரை எப்படி மீட்டோம் என்பதை விளக்கினேன். தவறு செய்தஅதிரடிப்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தம் கடத்தியதாகவும், சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதாகவுமே வைத்துக்கொள்வோம். ஆனால், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவி இல்லாமல் அவனால் இதைச் செய்திருக்க முடியாது. இந்தஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பற்றி ஏன் யாருமே பேச மறுக்கிறார்கள்.

இந்த ஊழல் பெருச்சாளிகள் எல்லாம் இப்போது சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை விட்டுவிட்டு வீரப்பனைமட்டும் தண்டிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

இது ஒரு சமூக-பொருளாதார பிரச்சனை:

வீரப்பன் பிரச்சனை என்பது சமூக-பொருளாதாரப் பிரச்சனையில் ஒன்று. இந்த சமூக-பொருளாதார பிரச்சனைகளைத் தீர்க்கஅரசுகள் நடவடிக்கை எடுக்காத வரை பல வீரப்பன்கள் முளைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

வீரப்பன் மிக எளியவன். நாம் சொல்லும் வார்த்தைகளை நம்புகிறான். அவனது குடும்பமே கூட அதிரடிப்படையால்பாதிக்கப்பட்டு சின்னாபின்னாமாகியுள்ளது. அவனது தங்கை போலீசாரால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். அவரது தம்பிவிசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டார். ஆனால், இப்போது வீரப்பன் தனக்கு நிவாரணம் கேட்கவில்லை. பாதிக்கப்பட்டமற்றவர்களுக்குத் தான் கேட்கிறார்.

ராஜ்குமாரை மீட்கப்பட்டதற்கு முக்கிய காரணமே எனக்கும் வீரப்பனுக்கும் இடையே ஒருவர் மீது ஒருவர் இருந்த நம்பிக்கைதான்.

மேட்டூர் பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் கொளத்தூர் மணி. எனவே தான் அவரையும அழைத்துச் சென்றேன். டாக்டர்பானுவை அழைத்து வந்தவர் மணி தான். ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்க காட்டுக்கு வருகிறீர்களா எனக்கேட்டபோது மிகதைரியாமாக ஒப்புக் கொணடார் பானு. காட்டுக்குள் மிகத் தைரியமாக வந்தார்.

அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்களை எனக்கு அடையாளம் காட்டியதும் கொளத்தூர் மணி தான்.

விடுதல்ை புலிகளை தொடர்புபடுத்தாதீர்:

இந்கப் பிரச்சனையில் விடுதலைப் புலிகளைத் தொடர்படுத்துவது உள்நோக்கத்துடன் செய்யப்படும் தேவையற்ற செயல்.

ராஜ்குமார் மீட்பில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தீவிர அக்கரை காட்டினார். தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் சோ. பாலகிருஷ்ணன் என்னை தேச விரோதி என்று கூறியதால் நான் இனி காட்டுக்குச் செல்ல மாட்டேன் எனஅறிவித்தவுடன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். காட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

இப்போது ராஜ்குமாரை விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் தொலைபேசியில் என்னை அழைத்துப் பாராட்டினார்.

காவிரிப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இதுவரை கர்நாடகம் ரூ. 6.5 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளதைவீரப்பனிடம் விளக்கினோம். மேலும் 10,000 விண்ணப்பங்கள வந்துள்ளன. அவற்றை அரசு பரிசீலித்து வருகிறது. இது தவிரஅதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு மாநில அரசுகளும் தலா ரூ. 5 கோடி வழங்க முன் வந்துள்ளதையும்தெரிவித்தேன்.

மேலும் தடா கைதிகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியையும் கர்நாடக அரசு நியமித்துள்ளதையும் வீரப்பனிடம் சொன்னேன்.

26ம் தேதி தமிழ் அமைப்புகள் கூட்டம்:

வரும் 26ம் தேதி சென்னையில் பல்வேறு தமிழர் அமைப்புகள் கூடி விவாதிக்க உள்ளன. இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமை வகிப்பார். இந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதித் பின்னர்முதல்வர் கருணாநிதியிடம் மனு கொடுப்போம்.

கர்நாடக மாநில முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ஸ்ரீநிவாசுலு தொடர்ந்து எங்களுக்கு பல்வேறு உதவிகளையும்ஆலோசனைகளையும் வழங்கினார்.

எங்களது கடைசி பயணத்தின்போது நக்கீரன் ஆசிரியர் கோபாலால் காட்டுக்குள் வர முடியவில்லை. அவர் தாமதமாக வந்ததால்தான் அவரை காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு நாங்கள திரும்பிவந்தபோது கோபால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார் என்றார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X