For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: தேர்தலில் ஜனதா தளம் 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத் தயாராகிறது என்று அதன் மாநிலத் தலைவர் ஜி.ஏ. வடிவேலுகூறியிருக்கிறாரே? அது பற்றி ... ?

ப: நடக்க இருப்பது சட்ட சபைக்கான தேர்தலே தவிர, பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் அல்ல - என்பதை யாராவது அவருக்கு நினைவுபடுத்தினால்நல்லது.

கே: ஊழலை விட மோசமானது எது?

ப: ஊழல் நடந்தால் தவறில்லை - என்ற நினைப்பு.

கே: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணிகளை, பத்திரிக்கைகள் மூலம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் தெரிவிக்கவேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி ...?

ப: தேர்தல் நேரத்தில், பத்திரிக்கைகள், கிரிமினல் ஸப்ளிமென்ட் தினம் தினம் வெளியிட வேண்டியிருக்கும்.

கே: வைகோ - பாலசிங்கம் சந்திப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்ன விளைவை ஏற்படுத்தும்?

ப: எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி, தொடர்ந்து ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் - அக் கட்சி வேறுஎன்ன செய்தாலும், அது பற்றி பா.ஜ.க,வுக்கு கவலை இல்லை.

கே: வீரப்பன் ஆதரவாளர்களின் விடுதலை வழக்கில் தலையிடுவதற்கில்லை என்ற தேசிய மனித உரிமைகள் கமிஷன் முடிவு பற்றி ...?

ப: மனித உரிமை என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கிற உருப்படியான முடிவு இது தான்.

கே: தமிழக அரசியலில் திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணி ஏற்பட்டால், மக்களின் ஆதரவு கிடைக்குமா?

ப: ஆதரவு கிடைக்கலாம்: அது ஓட்டுப் போட வராத ஆதரவாக இருக்கும்.

கே: கபில்தேவுக்கு எதிராக மனோஜ் பிரபாகர், கூறிய குற்றச்சாட்டு, அவர் மீதே திரும்பியுள்ளதே? கவனித்தீர்களா?

ப: எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது. விசாரணையை மும்முரமாக முடுக்கி விட்ட மத்திய மந்திரி டின்சாவின் இலாகா பறிக்கப்பட்டுள்ளது -இன்னமும் மர்மத்தை ஆழமாக்குகிறது.

கே: அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேராதென பங்காரு லட்சுமண் எந்த நம்பிக்கையில் கூறியிருக்கிறார்?

ப: நிச்சயமில்லாத, சட்டசபை வெற்றிகளுக்காக - நிச்சயமான கை மேல் இருக்கிற, மத்திய அரசில் இருக்கும் பதவிகளை விட்டுக் கொடுக்க,அவ்வளவு எளிதில் ராமதாஸ் முன் வர மாட்டார் - என்று லட்சுமண் நம்புகிறார் போலிருக்கிறது.

கே: எத்தனை காலம்தான் இந்த அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து கொண்டிருப்பீர்கள்? உங்களுக்கு சலிப்பாக இல்லையா?

ப: தீனி தின்பது சலித்துப் போனால் எப்படி?

கே: சட்டசபையில் நெடுமாறன் பற்றி, சோ. பாலகிருஷ்ணன் பேசியதற்கு

சபையில் இல்லாதவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசுவது தவறு என்று சபாநாயகர் கூறியிருக்கிறாரே?

ப; ஆமாம். நெடுமாறன் என்ன - ஜெயலலிதாவா, சபையில் இல்லாவிட்டாலும் விமர்சனம் செய்யப்படுவதற்கு?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X