For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வேயை சந்திக்கிறது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தாக்கா டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில்சனிக்கிழமை துவங்கும் ஜிம்பாப்வேயுடான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாநம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால்,இந்தப்போட்டி பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.

மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், ஜிம்பாப்வே அணிகள்மோதுகின்றன. பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் முதல் போட்டி நடக்கிறது.

ஜிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமானஅணி என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இருந்தாலும் கூட அதைசாதாரணமாக எண்ணி விட முடியாது. முதல் போட்டியில் விளையாடிய வங்கதேசஅணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்ததை இந்தியர்கள் மறந்து விடக் கூடாது.

இந்த ஆண்டு மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது.நான்கு போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக ஆடியதாக சொல்லி விட முடியாது.வங்கதேச போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது.

கேப்டனாக சவுரவ் கங்குலிக்கு வங்கதேசப் போட்டிதான் முதல் டெஸ்ட். வெற்றியுடன்தனது டெஸ்ட் போட்டிகளை கேப்டனாக அவர் துவங்கியுள்ளார். அது தொடரவேண்டும் என்பதே கிரிக்கெட் பிரியர்களின் பேரவா.

தனது போட்டி குறித்து கங்குலி கூறுகையில், பல மாதங்களாகவே வெளிநாட்டுப்பயிற்சியாளரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது ஜான் ரைட் வந்துள்ளார்.அவரின் கீழ் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார்.

ஜான் ரைட்டும் ஜிம்பாப்வே தொடர் குறித்து அபார நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எங்களிடம் மேஜிக் எதுவும் இல்லை. ஆட்டத்தின் அடிப்படையைதெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்து விட்டால், அருமையான ரிசல்ட்கிடைக்கும் என்றார்.

கங்குலி தொடர்ந்து கூறுகையில், வெற்றி ஒன்றுதான் இந்திய அணியின்முதன்மையான நோக்கம் என்றார்.

முதல் போட்டியில் அனில் கும்ப்ளே ஆடவில்லை. இதே மைதானத்தில் கடந்த ஆண்டுபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து 10 விக்கெட்டுகளையும்வீழ்த்தி கும்ப்ளே உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வீரர் சரந்தீப் சிங், அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. கும்பளேஇல்லாதது இவரது வாய்ப்பை அதிகரித்துள்ளது. இவர் தவிர சுனில் ஜோஷி நிச்சயம்இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரளி கார்த்திக்கும் இருக்கிறார்.இவர்கள் மூவரும் சுழறபந்துவீச்சைக் கவனித்துக் கொள்வார்கள்.

வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை அகர்கர், ஜாகீர் கான் ஆகியோர் உள்ளனர்.அனுபவசாலி ஸ்ரீநாத்தும் அணியில் இருக்கிறார். இவர்களில் இருவர் மட்டுமே ஆடும்வாய்ப்பை பெறுவார்கள் என்பதால் யாரை விடுவது என்பதில் கங்குலிக்குக் குழப்பம்ஏற்படலாம்.

பேட்டிங் வரிசை, கோட்டை போல உள்ளது. டெண்டுல்கர்,டிராவிட், ரமேஷ், சிவ்சுந்தர் தாஸ் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பர் விஜய் தாஹியா இருக்கிறார்.பேட்டிங்கும் செய்வதால் தாஹியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. 1992-93ம்ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில்ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு பல போட்டிகளில் விளையாடிஜிம்பாப்வே அணி நல்ல அனுபவத்துடன் உள்ளது.

உள்நாட்டில் விளையாடும் மிகப் பெரிய சாதகமான அம்சம் இருப்பதால் இந்தப்போட்டியில், இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது எனலாம்.

அணிகள்:

இந்தியா: கங்குலி (கேப்டன்), சிவ் சுந்தர் தாஸ், ரமேஷ், ராகுல் டிராவிட், டெண்டுல்கர்,லட்சுமண், யுவராஜ் சிங், விஜய் தாஹியா (விக்கெட் கீப்பர்), சுனில் ஜோஷி, அகர்கர்,ஸ்ரீநாத், ஜாகீர் கான், சரந்தீப் சிங், முரளி கார்த்திக்.

ஜிம்பாப்வே: ஹீத் ஸ்ட்ரீக் (கேப்டன்), கய் விட்டால், அலிஸ்டர் கேம்பல், ஸ்டூவர்ட்கார்லிஸ்லி, ஆண்டி பிளவர், கிரான்ட் பிளவர், பிரன்ட், மடோண்டா, டக்ளஸ்மரில்லியர், பிரையன் மர்பி, நிக்கலா, ஒலங்கா, ரெனி, பால் ஸ்டிராங்.

நடுவர்கள்: வெங்கட்ராகவன், ஜான் ஹாம்ப்ஷயர்.

3-வது நடுவர்: பேரி ஜார்மான்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X