For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வீரப்பன் வாங்கிய 30 கோடி புலிகளிடம் ஒப்படைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் வாங்கிய ரூ. 30 கோடி பணம், சென்னையில் வைத்துவிடுதலைப் புலிகளிடம் வழங்கப்பட்டதாக தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அவர் சென்னையில் விடுத்துள்ள அறிக்கை விவரம்:

ராஜ்குமாரின் கடத்தலும், விடுதலையும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பைபாதித்துள்ளது. நம்மால் பாகிஸ்தானை பயங்கரவாதிகள் என அறிவிக்க முடியாதபடிவீரப்பன் விவகாரம் இந்தியாவின் பெயரை கெடுத்து விட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ராஜ்குமாரை விடுவிக்க ரூ 30 கோடிகேட்குமாறு வீரப்பனுக்குக் கடிதம் எழுதிய விஷயம் இப்போது வெளிச்சத்திற்குவந்துள்ளது.

அந்த பணம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறியஉணவு விடுதியில் வைத்து விடுதலைப்புலிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கடிதத்தை எழுதுமாறு பிரபாகரனுக்கு கூறியது யார் என தெரியாவிட்டாலும்,இந்த கடிதம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி வழியாகவும்,பெங்களூரில் டாக்டராக உள்ள மலேசிய தமிழ் பெண் வழியாகவும் வீரப்பனிடம்கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இந்த விஷயம் தெரியும் என்று சுவாமிகூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஜெ.:

இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக அரசு ராஜ்குமார்கடத்தல் தொடர்பாக வெள்ளை அறிக்கை சமர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவிவிலக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வீரப்பனை பிடிக்க சிறப்பு அதிரடிப்படையை உபயோகப்படுத்தாதது பற்றியும்,ராஜ்குமாரை விடுவிக்க நெடுமாறனுடன் டாக்டர் பானு சென்றது பற்றியஉண்மைகளையும் கூற வேண்டும். இல்லையென்றால் இந்த அரசு பதவி விலகவேண்டும்.

காட்டில் நடந்தது என்ன என்பதை தமிழக மக்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நடிகர்ராஜ்குமார் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் அவரால் மட்டுமே கடத்தலுக்குபின்னால் உள்ள உண்மைகளை கூற முடியும்.

ராஜ்குமார் கடத்தலுக்கு பின்னால் உள்ள சதித் திட்டங்களும், வீரப்பனுக்குகொடுக்கப்பட்ட பணங்கள் பற்றிய உண்மைகளும் தெரிய வேண்டுமானால் வீரப்பன்சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் கருணாநிதி அரசை குறை கூறிய பின்பும் அவர் பதவியில் இருப்பதற்குஎந்த விதமான தகுதியும் கிடையாது.

ராஜ்குமாரை உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என கூறி அவரை விடுவிக்க எந்தவிதமான போலீஸ் முயற்சியும் மேற்கொள்ள கருணாநிதி மறுத்துவிட்டார். ஆனால்ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு 120 மணி நேரம் ஆகிய பின்னும் வீரப்பனை பிடிக்க ஏன்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X