வயதான மாடுகளை ஏலம் விடாதீர்
சென்னை:
வயதான மாடுகளை ஏலத்தில் விற்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச்சேர்ந்த சாந்திலால் ஜெயின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சயாத்துக்கள் பசு, காளை எருமை மாடுகளை பராமரிக்கின்றன. இவை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உழைப்பின் பலனை உறிஞ்சிய பிறகு , அவற்றை இறைச்சிக்காக ஏலம் விடுகின்றனர். இந்த மாடுகளால் எந்தப் பலனும் இல்லைஎன்பதால் இவற்றை பராமரிக்க முடியாது என்று காரணம் கூறப்படுகின்றது.
உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஓய்வூதிய சலுகைகளை அரசு அளிக்கின்றது. பின்னர் அவர்களின் வாரிசுகளுக்கும் அளிக்கப்படுகிறது. ஆனால் பணம் இல்லைஎன்று மாடுகளை மட்டும் ஏலத்தில் விற்பது ஏன் என புரியவில்லை.
விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புக்கு அரசு நிதி உதவி செய்யலாம். இந்த அமைப்புகளிடம் வயதான விலங்குகளை ஒப்படைக்ககலாம். எனவே, வயதானவிலங்குகளை ஏலத்தில் விற்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
தற்பொழுது எத்தனை விலங்குகள் உள்ளாட்சிஅமைப்புகள் வசம் உள்ளன என்பது குறித்த அறிக்கையை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யுமாறுஉத்திரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதி சம்பத் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள்பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் விலங்குகள் நில வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications