For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் 20 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இருபது கோடிரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள்பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து தென்மண்டல போதை மருந்து தடுப்புக் குழு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

தென் மண்டல போதை மருந்து தடுப்புக்குழு மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பலை வடசென்னையில்பொறி வைத்துப் பிடித்துள்ளனர். உலகம் தழுவிய கடத்தல் கும்பலோடு தொடர்புடையதாகக் கருதப்படும்இவர்கள், இந்தியாவில் மத்தியப்பிரதேசம், மஞ்சூர் பகுதியிலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது.

சட்டவிரோத போதை மருந்து ஏற்றுமதி செய்யும் இவர்கள், பெருமளவிலான ஹெராயின் போதைப் பொருளைஇலங்கைக்கு தமிழக தென் கடற்கரை வழியாக கடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்குசென்னையை மையமாக வைத்து இயங்கி இருக்கின்றனர்.

சில குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மத்திய போதை மருந்து கடத்தல் தடுப்புப்பிரிவு வட சென்னையில்மாதவரம் அருகில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிரப்பும் மையம் அருகில் சாலையில் விடியற்காலையில் இந்த வேட்டையை நடத்தியுள்ளனர். சாலை ஓரத்தில் லாரி ஓன்றினை ஓட்டி சந்தேகத்திற்கு இடமாகஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. லாரியையும் ஆட்டோவையும் மடக்கிப் பிடித்தனர்.

லாரியில், முகமது உமர் என்கிற கமது சலிம், அகமது மீரா தம்பி என்கிற மீரான் சேகர், ஜஸ்வந்த்சிங் என்கிறகியான்ஜ் ஹர்தயால் சிங் என்கிற தயாள் ஆகிய நால்வரும் லாரியில் பிடிபட்டனர்.

சத்யநாதன் என்கிற நிாதன், நஷீத் அலி என்கிற நபு, இவர்கள் ஆட்டோவில் பிடிபட்டனர். லாரியிலும் ,ஆட்டோவிலும் சோதனையிட்டதில் இருபது கிலோகிராம் எடையுள்ள மிக உயர்ந்த ஹெராயின் போதை மருந்துஇருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்தின் உலகச்சந்தை மதிப்பு இருபது கோடிரூபாய். இதனை எளிதில்கண்டுபிடிக்க முடியாத வகையில் டிரைவர் சீட்டுக்கு அடியில் பள்ளமாக வடிவமைத்து அதற்குள் இதனை ஒளித்துமறைத்து பதுக்கி வைத்திருந்தனர்.

இதனோடு சுமார் பதினைந்தாயிரம் ப்ளைவுட் துண்டுகள் அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. அதன் மதிப்பு சுமார்ஒரு லட்சம் ரூபாய் ஆகும். முகமது சலீம் எனும் மத்திய பிரதேசம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவருடையது என்றுதெரிகிறது.

சம்பந்தப்பட்ட லாரி மற்றும் ஆட்டோவில் தடை செய்யப்பட்ட சட்டத்திற்கு புறம்பான ஆவணங்கள் சிலவும்கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் போதைமருந்து கடத்தல் சம்பந்தப்பட்டவர்கள்என்பதைக் கண்டறிந்து கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அவர்கள் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டனர். இவர்கள் குறித்து மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என தென்மண்டலபோதைமருந்து கடத்தல் தடுப்புக்குழு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X