165 தொகுதிகளில் வெற்றி .. அதிமுக சர்வே முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக 146 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று அக்கட்சி நடத்திய சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து தனித்து ஆட்சி அமைப்பது என்ற தனது குறிக்கோளை விட்டு விட்டு பாமக வை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிமுக.

ஜெயலலிதா பல விழாக்களில், அடுத்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறி வந்தார். கூட்டணிக் கட்சித்தலைவரான மூப்பனாரை வைத்துக் கொண்டும் அவர் இவ்வாறு பேசி வந்தார்.

சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திலும் தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இவர் ஹைதராபாத் செல்லுமுன், தனித்து ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்று கேட்ட போது தேர்தல் நடந்து முடிவுகள் வெளிவந்ததும்தான்அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

மூப்பனாரின் 3-வது அணி முயற்சி:

இதற்கிடையே, 3 வது அணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார். இதற்கான ரகசியஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளன.

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதாகவும் செய்திகள்தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா ஹைதராபாத்துக்குச் செல்லும் முன் தன்னிடம் ஏற்கனவே உதவியாளராக இருந்த பாஸ்கர் என்பவரிடம், தமிழகத் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து சர்வே எடுத்துத் தருமாறு கூறினாராம்.

இதையடுத்து பாஸ்கர், சாகர் என்ற நிறுவனத்தின் உதவியுடன் 10 பேர் கொண்ட குழுவை தமிழகம் முழுவதும் சர்வே நடத்த வைத்தார்.

ஜெயலலிதா ஹைதராபாத் செல்லுமுன் அந்த சர்வே அவரிடம் கொடுக்கப்பட்டது. அந்த சர்வே முடிவில், தற்போது உள்ள கூட்டணியோடு தேர்தலில்போட்டியிட்டால் அதிமுக அடுத்த தேர்தலில் 146 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மாவட்டங்களில் மட்டுமே அதிமுக வுக்கு சாதகமான ஓட்டுக்கள் விழும். அடுத்த தேர்தலில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளானதிமுக, அதிமுக இரு கட்சிகளாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி 3 வது அணி அமைத்து விடலாம் என்று தமாகா தலைவர் மூப்பனார் கருதுகிறார். மூப்பனாருக்கும், ராமதாசுக்கும்சர்வே முடிவுகள் எப்படியோ தெரிந்து விட்டன என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் உருவாவதைப் பார்த்து திமுக வும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் குறித்து விவாதம் செய்துவருகின்றன. இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற