தடையை நீக்க கோர்ட்டை நாடுவேன் ...ஜடேஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளதடையை நீக்க வாரியத்திடம் கோருவேன். மறுத்தால், நீதிமன்றத்தில் முறையிடுவேன்என்று கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றில் ஜடேஜா பேசுகையில், சி.பி.ஐ. என் மீதுநீதிமன்றத்தில் எந்த வழக்கும் போடவில்லை. எனவே என் மீதான புகார்களை நான்நீதிமன்றம் சென்று மறுக்கவில்லை.

சி.பி.ஐ தரப்பில் என் மீது வழக்குப் போட்டிருந்தால்,அதை மறுத்து நானும் மனுசெய்திருப்பேன். வாரியத்தில் என் மீதான புகார் தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட்வாரியத்தில் தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதன்படி எனக்குத் தண்டனைஅறிவித்துள்ளனர். அப்பீல் செய்யவும் இறுதி வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

அதன்படி அப்பீல் செய்யவுள்ளேன். அப்பீலில் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால்கோர்ட்டை நாடத் திட்டமிட்டுள்ளேன். என் மீதான புகாரை தவறு என்று நிச்சயம்நீதிமன்றத்தில் முறையிடுவேன்.

எனது அரசியல் தொடர்புகள் காரணமாக பத்திரிகைகள் என் மீதான மேட்ச் பிக்ஸிங்புகாரை பெரிதுபடுத்தின. ஐந்து ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள வீரர்களில்சிலர், நீண்டகாலமாக விளையாடவில்லை, சிலரோ ஓய்வு பெற்று விட்டனர். எனக்கும்அதோபோன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன அர்த்தம்?

எனது சொத்துக்கள் அனைத்தும் சரியான முறையில் வாங்கப்பட்டவையே. நாங்கள்பணமே சம்பாதிக்கவில்லையா?. நான் குடியிருக்கும் கிரேட்டர் கைலாஷ் பகுதியில்உள்ள 12 பிளாட்டுக்களில் ஒன்று மட்டுமே எனக்குச் சொந்தமானது.

சைப்ரஸ் நாட்டிலுள்ள சொத்து எனது சகோதரர் ஜெய் ஜடேஜாவுக்குச் சொந்தமானது.எனது நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் இருக்கிறார். அவர் எனது ஒன்று விட்டசகோதரர். ராஜ்கோட் ராஜ பரம்பரையின் வாரிசு.

ஜெய் ஜடேஜாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு,அவரது பெயரில் நான்சைப்ரஸில் பிசினஸ் செய்வதாக கூறுகிறார்கள். அவரது வீட்டைக் கூட எனது வீடுஎன்கிறார்கள்.

அஸாருதீனும், கபில்தேவும் நான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. அவர்களே என்னிடம் இதைத் தெளிவாகக்கூறியுள்ளனர் என்றார் அவர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற