For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தை திரைப்படமாக எடுத்தால், அதில் கவுண்டமணி மற்றும் செந்தில்இருவருக்கும் எந்தெந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும்?

ப: கருணாநிதி, எஸ்.எம்.கிருஷ்ணா.

கே: லஞ்சம் என்றால் என்னவென்று கேட்கும் காலம் எப்போது வரும்?

ப: இப்போதே வந்துவிட்டதே! லஞ்சம் தருவதாகச் சொன்னால் - என்ன? வீடா, காரா,. ஃப்ளாட்டா, அயல்நாட்டுப்பணமா ... என்ன? என்று கேட்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே!

கே: விவசாயிகளுக்கு ஆதரவாக, மாஜி பிரதமர்கள் நடத்திய போராட்டம் பற்றி ... ?

ப; இந்த மாஜி பிரதமர்களின் கூட்டு, வர வர, எஸ்.டி.எஸ். கட்சி மாதிரி, முதியோர் சங்கமாகி வருகிறது. முதியோர்சங்க பொழுது போக்குகளில் ஒன்று - விவசாயி ஆதரவுப் போராட்டம்.

கே: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதுபற்றி ... ?

ப: சரி, வேண்டாம். மந்திரி பதவி?

கே: சி.பி.ஐ. என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா என்று கேட்ட ஜெயலலிதாதான், இப்போதுராஜ்குமார் கடத்தல் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்கிறார் - என்று முதல்வர் கருணாநிதிகூறியிருப்பது பற்றி ... ?

ப: போலீசாரைக் குறை கூறியவர்கள், போலீசாரிடம் எந்த புகாருக்கும் போகக் கூடாது என்று சொல்ல முடியுமா?குறையுள்ள அமைப்பு என்ற கருத்து இருந்தாலும், இருக்கிற அமைப்பிடம்தானே கோரிக்கை வைக்க முடியும்?ரேஷன் கடையில் ஒரே மோசடி என்று சொன்ன ஆசாமி, ரேஷன் கடையில் எதையுமே வாங்கக்கூடாது - என்றுசொல்வது சரியாக இருக்குமா?

கே: பத்மனாபா, ராஜீவ் காந்தி ஆகியோரின் -படுகொலைக்குப் பிறகு விடுதலைப் புலிகள் மீதுஅனுதாபம் கொள்வதை விட்டுவிட்டோம் என்று கலைஞர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து ...?

ப: இல்லை. தவறான தகவலைத் துணிந்து தருகிறவர் முதல்வர். ராஜீவ் கொலைக்குப் பிறகும் கூட, அவர்விடுதலைப் புலிகளைப் பாராட்டியிருக்கிறார்: பிரபாகரனை புகழ்ந்திருக்கிறார்.

கே: சந்தனக் கடத்தல் வீரப்பன், ராஜ்குமாரை விடுவித்தது ஏன்? - என்று நெடுமாறனிடம் கேட்டதற்கு,அது மில்லியன் டாலர் கேள்வி என்று பதில் கூறுகிறாரே ... இதற்கு என்ன விளக்கம்?

ப: மில்லியன் டாலர் என்றால் நாலரை கோடி ரூபாய்தானே ஆகிறது?அவ்வளவு சீப்பாக முடிந்த விஷயமா இது?நம்ப முடியவில்லை.

கே: ராஜ்குமாரை மீட்டு வந்த குழுவில், பிராமணர்கள் யாரும் இல்லை. அதனால் எங்களைத் தாக்கிஎழுதுகிறார்கள் என்று கூறுகிறாரே பழ. நெடுமாறன்?

ப: ஏன் இதோடு நிறுத்தி விட்டார்? வீரப்பனும் பிராமணன் இல்லை: அவனோடு இருக்கும் தீவிரவாதிகளிலும்பிராமணர்கள் இல்லை:

அதனால்தான் அவன் செய்த ஜீவகாருண்ய செயல்களை கொலைகளாகவும், அந்த கூட்டத்தினர் செய்ய நினைக்கிறதர்ம கைங்கர்யங்களை நாச வேலைகளாகவும் சித்தரித்து எழுதுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் - அவருடையதேசியம் முழுமையாக பெற்றிருக்குமே!

கே: பா.ம.க. வின் நிலை, பெண்களுக்க 52 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதே - என்றுடாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது பற்றி ...? இது நடக்குமா?

ப: இது நடக்காது என்பதில் அவருக்கு இருக்கிற தைரியத்தில், உங்களுக்கு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?

கே: குரு இல்லாத வித்தை முழுமையடையாது என்பார்கள். அப்படியானால் அரசியலுக்கும் குருஅவசியம்தானே...?

ப: அவசியும்தான், அப்போதுதான் அவருக்கு துரோகம் செய்து, முதுகில் குத்தும் கலையில் முதலிலியே தேரச்சிபெறும் வாய்ப்பு சிஷ்யனுக்குக் கிட்டும்.

கே: அநியாயமான பல காரணங்களுக்காக, பல கட்சிகளிலிருந்து ஒதுக்தித் தள்ளப்பட்டவர்கள்அனைவருக்கும், மக்கள் தமிழ் தேசிய கட்சி பாசறையாக இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர்கண்ணப்பன் கூறியுள்ளது பற்றி ...?

ப: என்ன இது? அனாதை இல்லமா நடத்துகிறார் இவர்?

கே:சரத் யாதவ் தலைமையினாலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடைந்து போய் விட்டது பற்றி?

ப: ஜனதா தளம் உடைகிறது என்று சொல்லாதீர்கள். உடைகிற காலமெல்லாம் போய் வருடங்கள் சில ஆகிவிட்டன.

இப்போதெல்லாம் அது பொடிப் பொடியாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அந்த துகள்கள்காற்றில் பறக்கும்.

கே: பாஸ்வானின் ஜனசக்தி கட்சி உதயமாகி உள்ளதே! இது நாட்டுக்கு என்ன செய்யப்போகிறது?

ப: ஆரம்பம் நாட்டு அரசியலுக்கு நல்ல சேவையாக இருக்கிறது: ஜனதா தளத்தை பொடித்துத்தானே இது ஆரம்பம்ஆகியிருக்கிறது! இக் கட்சி, தானும் பொடியாகும் போது இந்த ஆரம்ப சேவை. மேலும் பரிமளிக்கும்.

கே: வீரப்பன், விடுதலைப் புலிகளின் வவுனியா காட்டுக்குச் சென்று விட்டான் என்று வரும் செய்திகள்,எந்த அளவுக்கு உண்மை? உங்கள் கருத்து என்ன?

ப: அது அரசு ரகசியம், எனக்குத் தெரியாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X