For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: வாஸ்து சாஸ்திரப்படி கோட்டையின் (தலைமைச் செயலகம்) வாயிலை மாற்றி அமைத்தால்,தமிழகத்தில் நல்ல ஆட்சி கிடைக்க வாய்புண்டா?

ப: வாஸ்து- வின்படி என்ன நடக்கிறது என்பது தெரியாது. வாஸ்தவமான நிலையின்படி, தமிழகத்தில் நல்லஆட்சிக்கு இப்போதைக்கு சான்ஸ் இல்லை.

கே: சந்தன வீரப்பன் பிடியில் இருந்து ராஜ்குமாரை மீட்க தாமதம் ஏற்பட்டதற்கு, நக்கீரன் கோபாலேகாரணம். அவரை அனுப்பாமல் வேறு யாரையாவது அனுப்பியிருந்தால், சீக்கிரமாகவே ராஜ்குமாரைமீட்டு வந்திருப்பார்கள் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருப்பது குறித்து ...?

ப: நக்கீரன் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுப்பது இப்போது ஃபாஷன் ஆகிவிட்டது. இதில் நான் வேறு சேரவேண்டுமா?

கே: போலி வாக்காளர்களுக்கு 3 ஆண்டு சிறை என்பது அதிகமான தண்டனையாக நீங்கள்கருதுகிறீர்களா?

ப: போலி வாக்காளர்களின் ஓட்டுகள், மற்ற மக்களை 5 ஆண்டு சிறையில் தள்ளுகிறதே - அது பரவாயில்லையா?

கே: தமிழக அரசு வீரப்பனை பிடிக்கும் நடவடிக்கையை எடுக்கிறாதா. அல்லது எடுப்பது போல்நடிக்கிறதா?

ப: நடிப்பது போல் நடக்கிறது.

கே; மத்திய அமைச்சர் முரசொலி மாறன், நல்லபடியாக உடல் நலம் தேறி வீடு வந்துள்ளது பற்றி ...?

ப: விரைவில் அவர் பூரண குணமடையட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

கே: வாழப்பாடி, ராமதாஸ் இருவரும் தனித்தனியே பிரதமரை சந்தித்தார்களே! என்ன பேசிஇருப்பார்கள் ...?

ப: இருவரும் ஒரே மாதிரிதான் பேசியிருப்பார்கள்: அவர் சொல்வதை நம்பாதீர்கள்.

கே: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்தின் வயது குறித்த சர்ச்சையில், நீங்கள் எந்தப் பக்கம் ...?

ப:எது உண்மை என்பது இறுதியாக வெளியாவதற்காகக் காத்திருப்பவர்கள் பக்கம்.

கே: தமிழக அரசு தரும் கலைமாமணி விருது, வருடா வருடம் அதிகம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டுவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி ...?

ப: விருது பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அந்த அளவுக்கு கலையில், இலக்கியத்தில் தமிழகம்வளர்ச்சி பெற்றிருக்கிறது. என்று அர்த்தம் என்று முதல்வர் பேசியிருக்கிறார்.

இதே லாஜிக்படி பார்த்தால் - அரசு திட்டங்களினால் பயன்பெறும் ஏழைகள் எண்ணிக்கை இவ்வளவுகூடியிருக்கிறது என்று கணக்கு தரப்படுவதால், தமிழகத்தில் ஏழைகள் எண்ணிக்கை வளர்ச்சி பெற்று வருகிறதுஎன்றுதானே அர்த்தம்!

கே: வால்மீகி கூட கொள்ளைக்காரணாகத்தான் இருந்தார். பிறகு மனம் மாறி ராமாயணம்எழதவில்லையா?அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா? அது போல் வீரப்பனை ஏற்றுக் கொள்ளவேண்டும். என்று நெடுமாறன் கூறியிருப்பது பற்றி ...?

ப: மெய் சிலிர்க்க வைக்கிற நியாயம்! அடுத்து அவரிடமிருந்து வரப்போகிற இதே மாதிரி அறிவு பூர்வமானநியாயவாதம் எதுவோ! மனைவியை வீட்டை விட்டுத் துரத்தினார் ராம்ர்; அவர் தெய்வமாக ஏற்கப்படவில்லையா?அதே போல் மனைவியை வீட்டை விட்டு துரத்தியவர்கள் எல்லோரையும் தெய்வங்களாக வழிபட வேண்டும்என்று சொல்வாரோ!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X