For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலியும், காளியும், அ.தி.மு.க.வும்..

By Staff
Google Oneindia Tamil News

இப்போதெல்லாம் ஆருடம், வாஸ்து, அருள் வாக்கு என்பதெல்லாம் சர்வசாதராணமாகி வருகிறது. அடுத்து நம்பவைக்கும் "ஹம்பக் கதையாகி வரும் இந்த தருணத்தில், ஜோதிடத்தை நம்புவதா, இல்லை விட்டுவிடுவதா என்றவாதிட்டால், அதற்கு பட்டமன்ற முடிவுகளைப் போல நம்பாமல் இருக்கவும் முடியாது, நம்பவும் முடியாது என்றபதில் தான் கிடைக்கும்.

இப்படி இருக்கையில் அரசியல்வாதிகளால் ஒரு பக்கம் மூடநம்பிக்கை, கடவுள் இல்லை என்ற பிரச்சாரத்தால் சிறிதுகாலம் ஓய்விலிருந்த பரிகாரங்கள் எல்லாம், ஜெயலலிதா பதவி காலத்தின்போது மறைந்து போனது. திராவிடப்பாரம்பரியத்தில் வழி வழியாக வந்த கடவுள் இல்லை, கடவுளை நம்புவன் முட்டாள், என்பதெல்லாம் போய்,கும்பகோணத்தில் நடந்த மகாமகம் வரை மூட நம்பிக்கை எனக் கருதப்பட்ட அனைத்திற்கும் முற்றுப் புள்ளிவைத்தது அ.தி.மு.க.

இப்போதெல்லாம் புலி ரத்தத்தில் யாகம், காளி பூஜை வரை நடத்தி பரிகாரம் தேடும் காலம் கைகூடி விட்டது. இந்தநிலையில் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற கங்கணத்தில் களம் இறங்கியுள்ளது அ.தி.மு.க.

இதற்காக மற்ற கட்சிகள் அனைத்தும் போட்டி போட்டு களத்தில் குதிக்கும் முன்னரே தன்னைத் தயார் படுத்தும்சூழ்நிலையை அ.தி.மு.க உருவாக்கிக் கொண்டு விட்டது. சமீபத்தில் ஜெயலலிதா தனது கட்சியைச் சேர்ந்த 56மாவட்டச் செயலர்களையும் அழைத்து முக்கிய வேலைகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

எனவே களத்தில் குதித்து வேலைகளை மும்முரமாக இப்போதே துவங்கி விட்டது அ.தி.மு.க. கூட்டணி, தொகுதிப்பங்கீடு என பேச்சுவார்த்தைகள் எப்போதும் துவங்கினாலும் கவலை இல்லை. இந்தத் தொகுதிப் பங்கீட்டில் இடம்பிடிக்கிறோமோ இல்லையோ, ஆனால், சுவற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக அ.தி.மு.கதொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு "வெள்ளைச் சுவர்களை ரிசர்வ் செய்யத் தொடங்கி விட்டனர். தேர்தல்கமிஷனே கூட இதற்குத் தடை விதிக்கும் முன்பு, தமிழகத்தின் பல இடங்களில் இந்த சுவர்களை ரிசர்வ் செய்யத்தொடங்கி விட்டது அ.தி.மு.க.

அதோடு, பல இடங்களில் இப்போதே வசூல் வேட்டையில் இறங்கியது. அதோடு மட்டுமல்ல, தமிழகமக்களிடையே இப்போது புதிய திருப்பத்தையும் அ.தி.மு.க.,வளர்த்துக் கொண்டு வருவது என்னவோஉண்மைதான். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் கொஞ்சம் மக்களுக்கு உடன்பாடு இருந்து வருகிறது. இதில்சிறிதளவும் சந்தேகம் இல்லை.

ஜெயலலிதாவிற்கு நீதிமன்றங்கள் தண்டனை கொடுத்தாலும், மக்கள் மன்னிக்கத் தொடங்கி விட்டனர் எனகூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

ஆனால், படித்தவர்களின் மத்தியிலும் சரி, அரசு ஊழியர்கள் மத்தியிலும் சரி, தி.மு.க. தலைமையிலான ஆட்சிஅவர்களுக்கு ஒரு பொற்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. எனவே படித்தோர் மத்தியிலும், அதிகாரத்தில்உள்ளோர்களுக்கும் தி.மு.க அதிகபட்சமாக இடம் பிடித்திருக்கிறது.

பொருளாதார நிலையைப் பொறுத்தவரை மிகவும் வருந்தக் கூடிய வகையிலேயே தி.மு.க நடந்து கொண்டுள்ளதுஎன்பது வியாபாரப் பொதுமக்களின் நோக்கமாக இருந்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் இருந்தஅளவிற்குப் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்த ஆட்சி காலத்தில் இருந்த "பணப் புழக்கம்இப்போது இல்லை என்பது இவர்கள் கணிப்பாகவே இருந்து வருகிறது.

எனவே, இப்போதைய நிலையில் அ.தி.மு.க தேர்தல் களத்திற்குத் தயாராகிறது. அதோடு முந்திக் கொண்டுள்ளது.அணியில் யார் இடம் பெற்றாலும் பெறாவிட்டாலும், முன்னணியில் வேலையைச் செய்ய மிகுந்த உற்சாகத்துடன்களத்தில் குதித்து விட்டது. இதற்கு கையும், சைக்கிளிலும் ஆதரவளித்தால், இரட்டை இலையின் பயணம் இனிதாகஅமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சூரியன் உதிக்கும் முன்பு, விழித்துக் கொண்டுள்ள அ.தி.மு.க., அரசியல்களத்தின் சூடுக்கு ஈடு கொடுக்குமா என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X