For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படையப்பாவுக்கு வலைவீச்சு?

By Staff
Google Oneindia Tamil News

ரஜினிகாந்த். பெயரில் காந்தம் கொண்ட இவர் தமிழக ரசிகர்களை காந்தம் போல்கவர்ந்தவர். 1996-ம் ஆண்டு தமிழக அரசியலில் புயலை உருவாக்கி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்.

முன்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினார் முன்னாள் தமிழக முதல்வர்எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இறக்கும் வரை தமிழகமுதல்வராக இருந்தார்.

இப்போது அவருக்கு பின் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர். போல அவர் கட்சி எதையும்ஆரம்பிக்கவில்லை. மாறாக, எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய திருப்பத்தை, அரசியலுக்குவராமலேயே ரஜினி உருவாக்கி விட்டார்.

1996-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டளிக்கும் படி கேட்டுக் கொண்டரஜினியின் வார்த்தையை மக்கள் அப்படியே ஏற்று திமுக கூட்டணியை அரியாசனத்தில்அமர்த்தினர்.

1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்குவாக்களியுங்கள் என்றார் ரஜினி. ஆனால் மக்கள் ஜெயலலிதா தலைமையிலானஅ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க மீண்டும் புத்துயிர் பெற்றது அ.தி.மு.க.

அ.தி.மு.க. மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால்ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் ஆனால் மெளனம் சாதித்தார்ரஜினிகாந்த்.

தி.மு.க. , பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணி என்றபெயரில் மெகா கூட்டணி அமைந்தது. அது மத்தியில் ஆட்சியை பிடித்தது.

இப்போது மீண்டும் அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல் பட்டு வருகின்றன. 5மாநிலங்களில் ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தலுக்கான நேரமும் வந்துவிட்டது.

தமிழகமும் தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. பலப்பல புதியகூட்டணிகள் ஏற்படும் வாய்புகள் உள்ளது. கட்சிகள் கூட்டணி விட்டு கூட்டணிக்குதாவும் வாய்ப்புகள் உள்ளது.

அரசியல் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தமிழக ஆளும் கட்சி மீண்டும்ரஜினிகாந்தின் ஆதரவை பிடிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறதோ என்றவகையில் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

M.Karunanidhiசமீப காலமாக ரஜினி அரசியலில் எந்த தீவிர ஈடுபாடும் காட்டாமல் இருந்து வருகிறார்.மத்திய அரசு அ.தி.மு.க. ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் கலைக்கப்பட்டுமீண்டும் தேர்தல் வந்தபோது, அ.தி.மு.க.வை 1996-ம் ஆண்டும், 1998-ம் ஆண்டும்கடுமையாக விமர்சித்து வந்த ரஜினிகாந்த் மீண்டும் மக்கள் மேல் தேர்தல்திணிக்கப்பட்டதற்கு காரணமான அ.தி.மு.க.வை எதிர்த்தோ அல்லது. தி.மு.க.வைஆதரித்தோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

அவரது கருத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களும், அவரது ஆதரவை எதிர்பார்த்தஅரசியல கட்சிகளும் ஏமாற்றம் அடைந்தன.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ரஜினி மெளனம் சாதிப்பதுஅரசியல் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

அவரது ஆதரவை பெற வேண்டும் என தி.மு.க. முயற்சிப்பது அரசு திரைப்பட விருதுவழங்கும் விழாவில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இந்த மாதம் 12-ம் தேதி 1999-ம் ஆண்டு சிறந்த நடிகர்,நடிகைகள் மற்றும் திரைப்படகலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்குதமிழக முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X