• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேர்தலுக்குள் முடிவெடுப்பாரா மூப்பனார்?

By Staff
|

மூப்பனார் தானும் குழம்பிக் கொண்டே அனைவரையும் தொடர்ந்த குழப்பிக் கொண்டிருக்கிறார்.

யாருடன் கூட்டு சேருவது, யாரை எதிர்ப்பது என்றே அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஜெயலலிதாவிடம் தனியே போய்சீட் கேட்டால் ஐந்தோ, ஆறோ இடங்கள் கொடுத்து கேவலப்படுத்துவார் என அஞ்சும் காங்கிரஸ் மிக விவரமாக த.மா.காவோடுசேர்ந்து போட்டியிடுவோம் எனக் கூறியுள்ளது.

ஆனால், வெட்டிச் சுமையாக ஏன் காங்கிரசை சுமந்து கொண்டு அலைகிறீர்கள் என மூப்பனாரிடம் ஜெயலலிதா கேள்வி எழுப்பிவருகிறார். உங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை மட்டும் பேசுவோம் என்று அவரிடம் ஜெ. கூறியுள்ளதாகத்தெரிகிறது.

கூட்டணி குறித்து இன்று முடிவெடுக்கப் போகிறேன், நாளை காலை முடிவைச் சொல்வேன், இன்னும் ஒரு மணி நேரத்தில்முடிவெடுக்கப் போகிறேன் என்று சொல்லியே காலம் கடத்தி வருகிறார் மூப்பனார்.

ஜெயலலிதாவால் அதிக இடம் கொடுக்க முடியாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிஇந்தா 40 சீட் என்றும் கூட த.மா.காவிடம் சொல்லிப் பார்த்துவிட்டார். ஆனால், இதற்கும் மூப்பனாரிடமிருந்து பதில் இல்லை.

அதிகபட்சம் யார் சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டு என்பது தான் மூப்பனாரின் நிலை என்று தெரிகிறது. ஆனால்,ஜெயலலிதா எத்தனை இடம் தருவார் என்பதை மூப்பனாரால் யூகிக்க கூட முடியவில்லை. முதலில் எத்தனை இடம் என்பதைஜெயலலிதா தெரிவிக்கட்டும் எனக் காத்திருக்கிறார் மூப்பனார்.

ஆனால், எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பதை ஜெயா வெளிப்படையாகக் கூறாமல் இருந்து வருகிறார். கடைசி நேரம் வரைஇழுத்தடித்து தேர்தல் நெருங்கும்போது இத்தனை சீட் தான் என்று த.மா.காவுக்கு ஜெ. அடிமாட்டு விலை நிர்ணயித்தாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே நேரத்தில் தான் தி.மு.கவுக்குச் செல்லவும் வாய்ப்புள்ளது என்பது போல காட்டி மிரட்டியே ஜெயாவிடமிருந்து அதிகஇடங்களை வாங்க மூப்பனார் முயல்கிறார்.

தேர்லுக்கு நெடு நாட்களுக்கு முன்பே விறுவிறுவென்று பல கட்சிகளை தன் கூட்டணியில் இழுத்துப் போட்டார் ஜெயா.த.மா.காவுடன் கூட்டணி அமைப்பதிலும் பிரச்சனை இருக்காது என நம்பினார். ஆனால், மூப்பனாரின் மெளனம்ஜெயலலிதாவையே குழப்பி வருகிறது.

மூப்பனார் நம் பக்கம் வராவிட்டாலும் பரவாயில்லை, அவர் ஜெயலலிதாவிடம் போய்விடக் கூடாது என தி.மு.க. நினைக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்குமே அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில் 3-வது அணி அமைத்து ஓட்டுகளைப் பிரித்தால்என்ன என்று கூட மூப்பனார் நினைப்பதாகத் தெரிகிறது. அவரது கூட்டணியில் உள்ள பல குட்டிக் கட்சிகளும் இதைத் தான் கூறிவருகின்றன. ஆனால், இதனால் தி.மு.கவுக்கு சாதகமாகிவிடும் என அஞ்சும் அ.தி.மு.க. அவரை 3-வது அணி அமைக்கவிடாமல்தடுக்க முயன்று வருகிறது.

தினரகன்-மூப்பனார் தொலைபேசியில் பேச்சு:

வியாழக்கிழமை மூப்பனாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலாவின் தம்பியும் ஜெயலலிதா பேரவைத் தலைவருமானதினகரன் எம்.பி., அய்யா மூன்றாவது அணி மட்டும் தொடங்கி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஜெயா சார்பில் தி.க. தலைவர் வீரமணி, தமிழக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் ஜெயவீர பாண்டியன் ஆகியோரும்மூப்பனாரை சந்தித்து 3-வது அணி எல்லாம் எதற்கு, பேசாமல் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதுவும் போதாது என்று ஜெயலலிதா தனது ஆடிட்டரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து மூப்பனாரிடம் அனுப்பியதாகத் தெரிகிறது.

குழப்பமே உன் பெயர் த.மா.காவா?

இறுதியில் கட்சித் தொண்டர்கள், தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்கலாம் என நினைத்த மூப்பனாருக்கு மேலும்குழப்பம் தான் மிஞ்சியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டப் பேரவை எதிர்க கட்சித் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையிலான பிரிவினர் ஜெயலலிதா கொடுக்கும் சீட்களை வாங்கிக் கொண்டு போய்விடுவோம்.மூன்றாவது அணி என்ற பெயரில் தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கட்சியில் பெரும்பாலானவர்களின் கருத்து இப்படித் தான் உள்ளது.

ஆனால், மாஜி மத்திய மந்திரி ப. சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி வேண்டாம் என்றுகூறி வருகின்றனர்.

இதனால் மூப்பனார் மேலும் குழப்பத்தில் உள்ளார்.

ஆனால், தேர்தலுக்குள் அவர் முடிவெடுத்து விடுவார் என்று நம்புவோம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X