ஸ்டாலின் சந்திப்பு: ரஜினியின் மெளனம் கலையுமா?
சென்னை:
நடிகர் ரஜினிகாந்தை, திமுக தலைவர் கருணநிதியின் மகனும் சென்னை நகரமேயருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தி.மு.கவைஆதரித்தார். அவர் தி.மு.கவை ஆதரித்து வெளியிட்ட அறிக்கை சன் டிவியில்தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இது தி.மு.கவுக்கு பெரும் பலத்தை கொடுத்து.
அந்த சமயத்தில் அ.தி.மு.கவுடன்,காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டதை எதிர்த்துமூப்பனார் காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவங்கினார்.ஆனால், அவருக்கு தி.மு.கவுடன் கூட்டணி செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.அதிக இடங்கள் தர கருணாநிதி மறுத்தார்.
இதையடுத்து வெளிநாட்டில் இருந்த ரஜினி கருணாநிதியுடன் பேசி த.மா.காவுக்கும் -தி.மு.கவுக்கும் இடையே கூட்டணி அமைவதற்கு உதவினார். தி.மு.க. -த.மா.கா.இரண்டும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றன. இந்தவெற்றியில் ரஜினிகாந்த் பெரும் பங்காற்றினார்.
இதையடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தி.மு.கவை ஆதரித்தார்ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் பிரச்சாரம் எடுபடவில்லை. மக்கள் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்தனர்.
இப்போது மீண்டும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில்ரஜினிகாந்த் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை நகர மேயரும்.தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனுமானஸ்டாலின் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் வியாழக்கிழமைசந்தித்து அரைமணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அரசியல் கட்சிகளும், ரஜினிகாந்தின் ஆதரவாளர்களும் அவர் யாரை ஆதரிக்கப்போகிறார் என்ற அவரது முடிவுக்காக காத்திருக்கிருக்கும் இன்றைய சூழலில்ரஜினிகாந்தை சந்த்தித்து ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கியத்துவம்பெறுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!