For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலுக்காக 52 ஆயிரம் போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

52 ஆயிரம் போலீசார் தமிழகத் தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு அளிப்பார்கள் என சேலத்தில் தமிழக டி.ஜி.பி.ராஜகோபால் தெரிவித்தார்.

சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக டி.ஜி.பி. ஆர்.ராஜகோபாலன் கூறியதாவது;

தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் தேர்தலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், அண்டை மாநில போலீசார் மற்றும் துணை நிலைராணுவத்தினர் ஆகியோர் இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சுமார் 52 ஆயிரம் போலீசார், 30 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 11 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்இப்பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தேவையான அளவுக்கு உதவிட துணை நிலை ராணுவப் படையினர்தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் நான்கு விதமான பிரச்னைகள் எழக் கூடும் என திட்டமிட்டுள்ளோம். இதன்படி ஜாதிக் கலவரம்அதிகம் ஏற்படும் பகுதியை ஒரு பகுதியாகப் பிரித்துள்ளோம். அரசியல் தகராறு ஏற்படும் பகுதியைகண்டறிந்துள்ளோம்.

வீரப்பன் நடமாட்டம் உள்ள பகுதிகளையும், நிக்சலைட்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகள் எனவும் பலஇடங்களைப் பிடித்துள்ளோம். நான்கு பகுதிகளாக இவை பிரிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைக்குரிய தொகுதிகள் மற்றும் சென்சிட்டிவ் எனக் கூறப்படும் தொகுதிகள் என 154 தொகுதிகளை இனம்கண்டுள்ளோம். இந்த தொகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.

வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. வீரப்பனுடன் இப்போது அதிகம் பேர் இல்லை. அவனுடன்,இப்போது சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுண்டர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். வீரப்பன் நடமாட்டம் குறித்துஓரளவு தெளிவு பெற்றுள்ளோம். எனவே அவனை விரைவில் பிடித்து விடுவோம்.

காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ. 13.6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாகஅளித்துள்ளது.

மீண்டும் தற்போது இரண்டாவது கட்டமாக ரூ. 29 கோடி ரூபாய் அளித்துள்ளது. காவல் துறையை நவீனப் படுத்த68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் காவல் துறைக்கு 449 வாகனங்கள் வாங்க முடிவுசெய்துள்ளோம் என்றார் டி.ஜி.பி ராஜகோபாலன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X