வைகோவை சமாதானப்படுத்துகிறார் பெர்னான்டஸ்
சென்னை:
தி.மு.க.-ம.தி.மு.க. இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் ஈடுபட்டுள்ளார்.
பெர்னான்டஸ் பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை திரும்பி வந்தார். அதன் பின் அவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் இரு கட்சிகளும் மீண்டும் இணையும் வாய்ப்பு எதுவும் காணப்படவில்லை. வைகோ மீண்டும்தி.மு.க.வுடன் இணைய விரும்பவில்லை. அதே போல் தி.மு.க.வும் மீண்டும் வைகோவை தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவிலலை.
இதற்கிடையே தே.ஜ.கூட்டணி தலைவர்கள்.தி.மு.க. தலைவர்களான ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், டி.ஆர்பாலு ஆகியோரை சந்தித்து பேசினார்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ம.தி.மு.க. அமைச்சர் பேட்டி
இந்நிலையில் ம.தி.மு.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய வருவாய்த்துறை இணை அமைச்சருமான செஞ்சிராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ம.தி.மு.க. மீண்டும் தி.மு.க. தலைமையிலான அணியில் இணைவதுஎன்ற பேச்சுக்கே இடமில்லை.
ம.தி.மு.க. பாண்டிச்சேரியில் 25 தொகுதிகளில் போட்டியிடும். தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிடும்வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் 14ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் மாநாட்டின் போது அறிவிக்கப்படும்என்றார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!