• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்சி மக்களவையில் முந்துகிறார் நம்பியார்

By Staff
|

திருச்சி:

திருச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுகுமாரன் நம்பியாரின் வெற்றிஉறுதி என்றேதான் தோன்றுகிறது.

மத்திய அமைச்சராக இருந்த திருச்சி எம்பி ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்ததைத்தொடர்ந்து, அங்கு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுடன் மக்களவை இடைத் தேர்தல்சேர்ந்து நடக்கிறது.

சென்னை நகர பாஜக தலைவர் சுகுமாரன் நம்பியார், அமெரிக்காவிலுள்ள ஒருபல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படித்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன் தெருத்தெருவாகத் அலைந்து, பாஜக அலுவலகத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதில்உறுப்பினர் ஆனவர்.

இவரை எதிர்த்து களத்தில் நிற்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை.இவர் பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தவர். 1998ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

திருச்சி மக்களவைத் தொகுதி மக்களில் பெரும்பாலானோர் உயர்ந்த ஜாதி மக்கள்.

இத்தொகுதியை உள்ளடக்கிய ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில்கூட அதிமுகபோட்டியிடவில்லை. எல்லாம் கூட்டணிக் கட்சிக்கே போய்விட்டன.

இதனால் தன்னுடைய கட்சித் தொண்டர்கள்கூட தொகுதியில் அவ்வளவாகஇல்லாததால், தலித் எழில்மலை வெற்றி பெறுவது பெரும் சந்தேகமே.

ஜெயலலிதா இங்கு பிரச்சாரம் செய்த மறுநாளே திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்மாற்றப்பட்டதாலும், அதிமுக தரப்பில் ஏகப்பட்ட குழப்பங்கள்.

மேலும், பாமகவிலிருந்து எழில்மலை பிரிந்து அதிமுகவுக்கு வந்து விட்டதால், பாமகதொண்டர்கள் இவரை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.

தவிர, அவருக்கு இது சொந்த ஊர் கிடையாது. நம்பியாருக்கும் இது சொந்த ஊர்இல்லை என்ற போதிலும், அவருடைய மனைவிக்கு இதுதான் பிறப்பிடம்.

ரங்கராஜன் குமாரமங்கலம் 1998ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த போதும்சரி, 1999ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த போதும் சரி இத்தொகுதியில்போட்டியிட்டு பெருவாரியான வெற்றி பெற்றார்.

அவர் இந்தத் தொகுதி எம்பியாக இருந்தபோது, தன்னுடைய மந்திரி பதவியைப்பயன்படுத்தி, ரயில்வே மேம்பாலம் கட்டித் தந்திருக்கிறார்; விமான நிலையத்தில்விமான ஓடுதளத்தை நீளப்படுத்தியுள்ளார்.

அவர் விட்டுச் சென்ற பல பணிகளைத் தொட்டுத் தொடரப் போவதாகக் கூறி சுகுமாரன்நம்பியார் ஒட்டுக் கேட்டு வருகிறார்.

ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்து விட்டதால் திருச்சி தொகுதி மக்களிடம்ஏற்பட்டுள்ள அனுதாபம் கூட இவருக்கு ஓட்டுக்களாக வந்து விழும் என்றநம்பிக்கையும் கொண்டிருக்கிறார் நம்பியார்.

தலித் எழில்மலைக்காக அவருடைய சில உறவினர்கள்தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுப்போராடி வருகின்றனர். திருச்சி நகர கிறிஸ்தவ சங்கத்தினரும் இவருக்கு ஆதரவுதெரிவித்திருப்பதும் ஒரு கூடுதலான ஆறுதல்.

சுகுமாரன் நம்பியாருக்கோ, அவருடைய கட்சித் தொண்டர்கள் மட்டுமில்லாமல்கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் முழு வீச்சில் உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஆனாலும், இவருடைய தந்தையும் பிரபல பழைய வில்லன் நடிகருமான எம்.என்.நம்பியார், அரசியல் ஈடுபாடில்லாத காரணத்தால் தன் மகனுக்காக ஓட்டுக் கேட்கப்போவதில்லை என்று ஏற்கனவே சொல்லி விட்டார்.

சுகுமாரன் நம்பியாரும், தலித் எழில்மலையும் தனிப்பட்ட முறையில்ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளாத போதிலும், அவர்கள் சார்ந்தஎதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசுவதற்குத் தயங்கவில்லை.

இருந்தாலும் தொகுதி நிலவரத்தை வைத்துக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது,சுகுமாரன் நம்பியாருக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்றுஅப்பட்டமாகவே தெரிகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X