தேர்தலை சீர்குலைக்க ஐ.எஸ்.ஐ.சதி: அத்வானி
பாண்டிச்சேரி:
வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலின்போது, தமிழகத்தின் பல நகரங்களையும் பாகிஸ்தான்உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தகர்க்கவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக திங்கள்கிழமை பாண்டிச்சேரி வந்த அத்வானி பத்திரிகையாளர்களுக்கு அளித்தபேட்டியில்,
தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்பட பல நகரங்களையும் தாக்குவதற்காக ஐ.எஸ்.ஐ. குறி வைத்துள்ளது. இதுதவிர,நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாதத்தைச் செயல்படுத்த ஐ.எஸ்.ஐ. முனைந்திருக்கிறது.
மத்திய அரசு ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்தந்த மாநில அரசுகளின்ஒத்துழைப்போடு இவற்றை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!