For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.

தமிழக சட்டசபைக்கு மே 10ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. அன்றே பாண்டிச்சேரியிலும் பொதுத் தேர்தல்நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்கியது. ஏப்ரல் 24-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் நான்கு வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டன. 26-ம் தேதிமுதல் பிரசாரம் சூடு பிடித்தது.

அக்னி வெயிலின் கொடுமையையும் மீறி வேட்பாளர்கள் சூடு பறக்க பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரம்செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம்செய்யக் கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்பஐ, அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல்பிரச்சாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடித்துக் கொண்டன.

ஒரு நாள் அமைதிக்குப் பின்னர் 10-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகிறது. மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X