For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவர்களை கொல்ல சதி: உளவுத்துறை திடுக் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் 4 முதல்வர்கள், முன்னாள் முதல்வர்உள்ளிட்ட 9 பேரின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தின்போது அவர்களுக்கு அதிகபட்சபாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என மாநில போலீசாரை உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பிரச்சாரம்செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நான்கு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 9 தலைவர்கள்உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்குமாறு மத்தியஉளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து 5 மாநில போலீஸ் தலைமையகத்திற்கு ரகசிய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின்விவரம்:

கருணாநிதி:

தமிழ் ஈழத்திற்காக பாடுபட்டுவரும் விடுதலை புலிகளாலும், அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தாலும் தமிழகமுதல்வர் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

தமிழகத்தில் விடுதலை புலிகளையும், அவர்களது ஆதரவாளர்களையும் கைது செய்தது. ம.தி.மு.க. தலைவர்கள்சிலரை கைது செய்தது. புலிகளுக்கு பொருள்கள் கடத்தியவர்களை கைது செய்தது. கடத்தலை தடை செய்ததுபோன்ற காரணத்தால் விடுதலைப்புலிகள் மூலம் கருணாநிதி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அல்-உம்மா இயக்கத்தை தடை செய்த காரணத்தால் அவர்களாலும் தமிழக முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல்உள்ளது.

இந்திய ஜிகாத் கமிட்டி, பா.ஜ.கவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவுடன் தி.மு.க. கூட்டணிவைத்துள்ளதால் கருணாநிதியின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.

ஜெயலலிதா:

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளை அடக்க நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் அவர்களதுநடவடிக்கையை கட்டுப்படுத்தியதால் புலிகள் மூலம் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

புலிகளின் பெண் தற்கொலை படையினர் 1999ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெயலலிதாவை கொல்வதற்காகசதித்திட்டம் தீட்ட பாங்காங் வந்தனர்.

ரேணு, மேனகா, ரஞ்ஜனி, கவிதா ஆகிய நான்கு பேரில் இரண்டு பேர் மட்டும் மகேஷ் என்பவரின் உதவியோடுசென்னை வந்து வில்லிவாக்கத்தில் தங்கியுள்ளர். இவர்களால் ஜெயலலிதாவின் உயிருக்கு அதிகபட்ச ஆபத்துஏற்பட வாய்ப்புள்ளது.

ராஜ்குமார் கடத்தலில் வீரப்பனுடன் இருந்த தமிழ் தீவிரவாதிகளும் ஜெயலலிதா மீது கோபத்தில் உள்ளதால்அவர்கள் மூலமும் ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

மகந்தா(அசாம் முதல்வர்)

உல்பா, சல்பா தீவிரவாதிகளை கொல்வதாலும், அந்த தீவிரவாத இயக்கத்தில் உள்ளவர்களை சரணடையவைப்பதாலும், என்.எஸ்.ஸி.என்.மற்றும் உல்பாவை தடைசெய்ததாலும் உல்பா தீவிரவாதிகள் மகந்தா மீதுகோபத்தில் உள்ளனர். இவர்கள் மூலம் மகந்தா உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நாயனார்(கேரள முதல்வர்)

அப்துல் நாசர் மதானியை கைது செய்ய தான் உதவியதாக சொல்லியிருந்தார் நாயனார். இதனால் மக்கள்ஜனநாயக முன்னணியினர் நாயனார் உயிருக்கு குறி வைத்துள்ளனர்.

கேரளாவில் கண்ணனூர், நாதபுரம், மலபார் ஆகிய இடங்களில் மதக்கலவரங்கள் ஏற்பட்டது. இங்குள்ள தீவிரவாதஅமைப்புகளால் நாயனார் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

ஓ.ராஜகோபால்(மத்திய ரயில்வே அமைச்சர்)

கேரளாவில் இருக்கும் ஒரே முக்கியமான பா.ஜ.க.தலைவர் இவர்தான். மதானி கைது செய்யப்பட்டதற்கும்,முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சங் பரிவார் அமைப்புதான் காரணம் என கூறி முஸ்லீம் தீவிரவாதஇயக்கங்கள் இவரை குறி வைத்துள்ளன.

மம்தா பானர்ஜி:(திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்)

ஜெய், சிமி, அகலி ஹதீஸ் போன்ற முஸ்லீம் இயக்கங்கள் மூலமாகவும், வெளிநாடு முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள்மூலமாகவும் மம்தாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

புத்ததேவ் பட்டாச்சார்யா: (மேற்கு வங்க முதல்வர்)

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக செயல்படும் மர்கீஸ் என்ற அமைப்பு உள்ளது. கோல்கத்தா நகரில்இருக்கும் காமத்திபுராவுக்கும், வெளிநாடுகளில் இருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளது. இவைமூலம் பட்டாச்சார்யாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

சுபாஷ் கெய்சிங்( டார்ஜிலிங் மாவட்ட தனி கவுன்சில் தலைவர்)

டார்ஜிலிங் கூர்க்கா எச்.சியிலிருந்து பிரிந்ததால் பாரத கூர்க்கா லீக் என்ற தனி அமைப்பை தொடங்கியதால் சட்ரேசுபா தலைமையிலான கூர்க்கா விடுதலை படையினரால் சுபாஷ் கெய்சிங்கின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

ஏ.பி.ஜி.எல்., ஜி.எஸ்.எம்.,யூ.பி.எப் ஆகியவற்றின் மூலமும் கெய்சிங்தின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

இந்த தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது அவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்என உளவுத்துறை கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X