For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருக்கு ஓட்டுப் போடலாம்?

By Staff
Google Oneindia Tamil News

பெரிய அளவில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டமோ அல்லது நிகழ்ச்சிகளையோ அ.தி.முகநடத்தவில்லை என்பது அக்கட்சிக்கு மிகப் பெரிய பலவீனமாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளுக்காக அது பெரிய அளவில் போராடவில்லை. அதன்பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், பிற முன்னாள் அமைச்சர்களும், தங்கள் மீது போடப்பட்டுள்ளவழக்குகளிலிருந்து எப்படித் தப்புவது என்ற குழப்பத்திலேயே மக்கள் பிரச்சினைகளை மறந்துவிட்டார்கள்.

டெஹல்கா.காம் போலி ஆயுத பேர ஊழல் புகாரை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தியஆர்ப்பாட்டத்தில் மட்டுமே அ.தி.மு.க கலந்து கொண்டது. வேறு எந்தப் போராட்டத்தையும் அதுநடத்தவில்லை.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் சிறைத்தண்டனைவழங்கப்பட்டதையடுத்து மாநிலத்தில் நடந்த வன்முறையில், தர்மபுரி அருகே மாணவியர் சென்ற பஸ்தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். இது அ.தி.மு.க மீது களங்கத்தைஏற்படுத்தியது. இந்தக் களங்கம் எப்போதும் நீங்காது.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை என்ற கருத்து மக்களிடையேஉள்ளதை மறுக்க முடியாது.

த.மா.கா, பா.ம.க., காங்கிரஸ்:

முதல் சில வருடங்கள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தலுக்கு சிலமாதங்கள் முன்பு அ.தி.முக கூட்டணிக்குத் தாவி விட்டது. முதலிலிருந்தே இவர்கள் மக்கள் நலத்திட்டங்கள் எதிலுமே ஆர்வம் காட்டியதில்லை. கட்சித் தலைவர் மூப்பனார் மாதிரியேஅமைதியாகவே இருந்துவிட்டது இந்தக் கட்சி.

இப்போது திமுக அணியில் இருந்து கொண்டு நியாயம் பேசும் சிதம்பரம் கூட தமிழகத்துக்காக என்னபோராட்டம் நடத்தினார், அவரால் தமிழகத்துக்கு ஏதாவது உபயோகம் இருந்ததா என்பதை அவர்தான் கூற வேண்டும்.

1996-ம் ஆண்டு த.மா.கா. மீது அமோக நம்பிக்கை வைத்து 60க்கும் மேற்பட்டவர்களைஎம்.எல்.ஏக்களாக தேர்வு செய்தார்கள் தமிழக மக்கள். ஆனால் அதற்குப் பிரதிபலனாகமக்களுக்கு எதையும் செய்யவில்லை தமிழ் மாநில காங்கிரஸ். எந்த கட்சிக்கு எதிராகபிறந்தார்களோ அதையே மறந்து அவர்களிடமே இப்போது தஞ்சம் புகுந்து விட்டார்கள்.

ஊழல் செய்யாத கட்சி என்ற பெயர் இவர்களுக்கு உண்டு. இருப்பினும் இந்தக் கட்சியின் சென்னைமாநகராட்சி கட்சித் தலைவர் வெற்றிவேல் மீது திடீரென கடத்தல் புகார் சுமத்தப்பட்டது கட்சியைப்பலவீனப்படுத்தியது.

கடந்த காலத்தில் காமராஜர் ஆட்சி என்று கூறிய த.மா.கா. இப்போது எம்.ஜி.ஆர். ஆட்சிஅமைப்போம் என்று கூறி வருகிறது. இதை மக்கள் எந்தளவுக்கு ஏற்கப் போகிறார்கள் என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இன்னும் வட மாவட்டங்களில் மட்டுமே அந்தக்கட்சி கோலோச்சி வருகிறது. சாதிக் கட்சி என்பதை அது மறுத்தாலும் யாரும் அதை ஏற்கத்தயாராக இல்லை. 4 எம்.எல்.ஏக்கள், 2 மத்திய அமைச்சர்கள் என செல்வாக்குடன் இருந்தவந்த இந்தக் கட்சி இப்போது அ.தி.முக கூட்டணியில் உள்ளது.

வன்னியர்களின் கட்சியாக மட்டுமே இந்தக் கட்சி பார்க்கப்படுவதால் பிற சமுதாய மக்கள்இந்தக் கட்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் இந்தக்கட்சி முக்கியமானது. காரணம் இவர்களின் ஓட்டு வங்கி.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது, வீரப்பன் விவகாரத்தில் இவர்கள் தலையீடுஇருப்பதாக கூறப்பட்டது ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் கட்சி குறித்த பரபரப்பானசெய்திகளில் சில. ஆயினும் மக்களிடையே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இவர்களிடம் பிரசார பலம்இல்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை காமராஜரோடு எல்லாம் போய் விட்டது. தலைவராகஇளங்கோவன் பொறுப்பேற்ற முதல் நாளே ஆபிஸ் இல்லாமல் அவதிப்பட்டார். அத்தைகயைபின்னணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில், நிற்க வேண்டுமே என்றசம்பிரதாயத்திற்காகத்தான் நிற்பதாக கட்சிக்குள்ளேயே பேச்சு உள்ளது.

யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்தக் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியே தனது வேட்பாளர்களுக்காக பிரசாரத்திற்கு வர முடியாது என்று சொல்லி விட்டார்.இதனால் தொண்டர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி பெரய அளவில் எதுவும் செய்து விடவில்லை. திண்டிவனம்ராமமூர்த்தி தலைவராக இருந்தபோது தி.மு.க. அரசின் பல திட்டங்களை எதிர்த்து ஓரளவுபோராட்டம் நடத்தினார். அப்போது தமிழ் மாநில காங்கிரஸும் இவர்களுக்கு உதவியாக இருந்தது.

இளங்கோவன் வந்த பிறகு அதிருப்தியாளர்களைச் சமாளிக்கவும் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவுமே அவருக்கு நேரம் சரியாக உள்ளது. ஆனால் இதுவரை இருந்த தலைவர்களுக்கு இவர்பரவாயில்லை என்ற கருத்து காங்கிரஸார் மத்தியில் உள்ளது. நிதானமான, மென்மையானஅணுகுமுறை, பொறுமை ஆகியவை இவரது பிளஸ் பாயின்டுகளாக உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X