For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன் தேர்தலுக்கு உதவுகிறது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இங்கிலாந்தில் தேர்தல் நடக்கும் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைஉபயோக்கப்படுத்துமாறு இங்கிலாந்து அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 4மாநிலங்களிலும், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பயன்படுத்தப்பட்டது. மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் செயல்பாடு எனக்கு திருப்தி அளித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட போது ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ எனமணப்பெண்ணின் தந்தை தனது மகளின் திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டுமே என பயப்படுவதுபோல் பயந்திருந்தேன்.

ஆனால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை. மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கைள எவ்வாறுபயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு சிறந்த விதத்தில் பயிற்சியளித்திருந்தோம்.

இங்கிலாந்தில் ஜுன் மாதம் தேர்தல்கள் நடக்கவுள்ளது. சிறந்த ஜனநாயக நாடான பிரிட்டன் அங்கு தேர்தல்நடக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.வாக்குச்சீட்டுகளை தவிர்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் இந்தியா, இங்கிலாந்தை முந்தி விட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விலையும்மிக குறைவு. வியாழக்கிழமை நடந்த தேர்தலில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழு அளவில்பயன்படுத்தப்பட்டன.

100க்கும் குறைவான இயந்திரங்கள்தான் பழுதுபட்டன. அவையும் உடனே சரி செய்யப்பட்டுவிட்டன. சிலஇடங்களில் பழுதுபட்ட இயந்திரத்திற்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குபதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு ஆகும் செலவை குறைத்துள்ளது ஒவ்வொரு தேர்தலின் போது வாக்குச்சீட்டுஅச்சடிப்பதற்கு அதிக அளவில் காகிதம் செலவாகும்.

சில சமயம் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் செய்தித்தாள்கள் அளவிற்கு வாக்குச்சீட்டுஅச்சடிக்கப்பட வேண்டியதிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தியதன் மூலம் அத்தகைய சிரமங்கள்தவிர்க்கப்பட்டன. காகிதமும் மிச்சப்படுத்தப்பட்டது என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X