• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அரசியல் விளையாட்டு இனிமேல்தான் ஆரம்பம்..

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் தேர்தல் வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஆனால் உண்மையான அரசியல் விளையாட்டு இப்போதுதான்ஆரம்பித்திருக்கிறது.

அதே நேரம் தொங்கு சட்டசபை ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே குழப்படிகள் மிகுந்து இருக்கும் தமிழக அரசியல், ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கு அடுத்து,இன்னும் அதிகமாகக் குழம்பும்.

திமுகவுக்கு வாக்களிப்பதையோ அதிமுகவுக்கு வாக்களிப்பதையோ மக்கள் தற்போது விரும்பவில்லை. படிப்படியாகக் குறைந்துவரும் வாக்கு சதவிகிதமே இதைக் காட்டுகிறது.

இதைவிட, தமிழகத்தின் 4 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், முழுக்க முழுக்க தேர்தலைப் புறக்கணித்து விட்டனர். அடிப்படைத் தேவைகள்எதுவும் தங்கள் கிராமத்திற்குச் செய்யப்படாததுதான் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை நடந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக கூட்டணிக்கு 48 சதவிகிதமும் திமுக கூட்டணிக்கு 47சதவிகிதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.

தனி மெஜாரிட்டி என்பதை இனி வரும் நாட்களில் தமிழக அரசு மறந்துவிட வேண்டியதுதான் என்பதையே இந்தக் கருத்துக் கணிப்புகாட்டுகிறது.

ஒருவேளை அதிமுக கூட்டணி அதிகப் பெரும்பான்மை பெற்று, ஜெயலலிதாவை முதல்வராகப் பரிந்துரை செய்தால் என்ன செய்யலாம்என்று இப்போதே கவர்னர் முழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சட்ட ஆலோசகர்களைக் கலந்து ஆலோசிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் அடுத்த முதல்வர் பதவி ஏற்பது வரை, ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு வருவதற்காக அதிமுகபோராடும்.

1997ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி ஏற்பட முக்கிய காரணமாக இருந்த அரசியல் வித்துவான் சோ,தற்போதும் அதிமுகவையே தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி சேரலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படிச் சேர்ந்தால், அதிமுககூட்டணியில் உள்ள காங்கிரசும், கம்யூனிஸ்டும், தமாகாவும் தங்கள் முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக் கொள்ளுமோ!

பாஜக போட்டியிடும் தொகுதிகள் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி போடும் மதிமுக வேறு, தனியாக நின்று "திருதிரு"வெனமுழித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் யார் எந்தக் கூட்டணிக்குப் போகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?

மின் சாதனங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் வழக்கமான கோளாறுகளே, இத்தேர்தலில் பயன்படுத்தப் பட்டிருக்கும் மின்வாக்கு எந்திரங்களிலும் நிகழ்ந்துள்ளன. அவைகூட உடனடியாகச் சரி செய்யப் பட்டுவிட்டன. ஆனால் இதையும் ஜெயலலிதாஅரசியலாக்க முனைந்தார்.

வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், பல வாக்காளர்கள் வாக்களிக்கமுடியாமல் வீடு திரும்பினர்.

சில வாக்காளர்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் தவறாகவும் மாற்றியும் அச்சிடப்பட்டிருந்தன. இதைவிட, ஒருவாக்காளர் ஓட்டுப் போடுவதற்காக வாக்குச்சாவடியில் முழு உருவமாக வந்து நிற்கும்போது, அவர் உயிரோடே இல்லை என்றுவாக்குச்சாவடி அதிகாரி கூறினால் அவருக்கு எப்படி இருக்கும்!?

இவ்வளவு குழப்பங்களுக்குமிடையில், மற்ற 4 மாநிலங்களை வைத்துப் பார்க்கும் போது, ஓரிரு வன்முறைசச் சம்பவங்களைத் தவிரதமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது என்று கூறலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X