For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கின்னஸ் சாதனைக்காக பாம்பு டான்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

மரணம் ஏற்படுவதற்குள் கின்னஸ் சாதனையை எட்டி விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார் பாம்புநடனமாடும் இளைஞர்.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த இளைஞர் மார்டின் சுரேஷ் மில்லர் (28). தமிழகத்தில் வசித்து வரும் இவர்,படிப்பை விட பாம்புகளுடன் நடமாடுவதுதான் இவரது முக்கிய வேலையாக இருந்து வருகிறது.

கடந்த 1986ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு நடனத்திற்காகத் தண்ணீர் பாம்பு ஒன்றைப் பிடித்து தனது உடலுடன்இணைத்து நடனமாடினார். அப்போது ஏற்பட்ட இனிய அனுபவத்தால், மீண்டும் பாம்புகளுடன் நடனமாடத்தொடங்கினார். இதையடுத்து சாரைப் பாம்புகள் எனப்படும் விஷம் குறைந்த பாம்புகளைப் பயன்படுத்தினார்.

ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அடுத்து விஷத் தன்மையுள்ள நாகப்பாம்பு, நல்ல பாம்பு என மாறி கருநாகம் வரைபாம்புகளுடன் நடனமாட ஆரம்பித்தார். அப்போது பாம்புகளை தன் உடலில் கடிக்க வைத்தார். நடனத்தின்உச்சமாக அவர், பாம்புகளை நாக்கில் கடிக்க விட்டார். மேலும், சாரைப் பாம்புகளை கடித்துத் தின்றார். இந்தநடனம் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும்

இதனால் இவர் உடம்பில் விஷம் ஏறியது. இதையடுத்து, பாம்பு கடிக்கு திருச்சி அருகே உள்ள வைத்தியர்ஒருவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் அடிக்கடி இந்த மருந்தை உட்கொண்டால் ஆபத்து ஏற்படும் என்று அவரை மருத்துவர் எச்சரித்தார்.ஆனாலும், விடாப்பிடியாக பாம்பு நடனத்தைத் தொடர்ந்த அவருக்கு உடலில் விஷம் நன்றாக ஏறியது.

பின்னர் பல்லி, தேள், விஷப் பூச்சிகளை மேடையிலே ய சாப்பிடத் தொடங்கி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.இதனை அருவருப்பின்றி அவர் சாப்பிட்டார். இதையடுத்து மாநிலத்திலுள்ள பெரும்பாலான இடங்களில் இவரதுபாம்பு நடனம் புகழ் பெற்றது.

விஷத்தில் அவர் உடல் இருந்ததால், அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. ஒரு கண்ணில் பூ விழுந்துகண்பார்வையும் பாதிப்படைந்தது.

கஷ்டப்பட்டு பாம்பு நடனம் மேற்கொண்டாலும், வாங்கும் பணம் அவருக்குப் போதவில்லை. இந்த நிலையில், ரூ.2,500 வரை கிடைத்தாலும், பாம்புகளை வாங்கவும், அவற்றைப் பாதுகாப்பாக நிகழ்ச்சிக்கு எடுத்துச் செல்லவும்அவருக்கு பணம் போதுமானதாக இருந்தது. இதனால் சேமிப்பு எதுவும் மிஞ்சவில்லை.

தற்போது அவரை மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாம்புக் கடி பெற்ற கை செயலிழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்நிலையில், 3 ஆயிரம் விஷப்பாம்புகளுடன் 3 நாள் தங்கியிருந்து சாதனை படைக்க வேண்டும் என அவர்துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான நிதி திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். திருச்சியில் நடக்கும் இந்தநிகழ்ச்சிக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்ற எதிர்பார்ப்பில் விளம்பரதாரரைத் தேடி திருச்சி முழுவதும்அலைந்து கொண்டிருக்கிறார்.

உடல்முழுவதும் விஷம் ஏறிய இவர் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X