For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் காணாமல் போன குரங்கு மனிதன்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கொளுத்தும் வெயிலில் டெல்லி மனிதர்களை குலை நடுங்க வைத்த மர்ம குரங்கு மனிதனின் டெல்லியிலிருந்துவெளியேறி விட்டான் என்று கூறப்படுகிறது.

குறைந்தது பத்து நாட்களுக்கு மேலாக டெல்லியை அச்சுறுத்தி வைத்திருந்த குரங்கு மனிதனின் தொல்லை சற்றேகுறைய ஆரம்பித்து விட்டது எனலாம்.

கடந்த ஒரு வார காலமாக குரங்கு மனிதனின் தாக்குதலில் டெல்லியில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கடந்தவாரம் முழுவதும் தூங்காத இரவுகளாகவே கழிந்தன.

டெல்லி மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்த குரங்கு மனிதன் பத்திரிக்கைகளில் முதல் பக்க செய்தியாகவேஇடம் பெற்றிருந்தான்.

குரங்கு மனிதன் குறித்து டெல்லியின் கிழக்குப்பகுதியில் வசிக்கும் ஓம்கார் சிங் கூறுகையில், கடந்த ஒரு வாரமாகடெல்லியை அச்சுறுத்தி வந்த குரங்கு மனிதனின் தொல்லைகள் அடங்கி விட்டது என்றே கூறலாம்.

இப்போது எங்கள் பகுதியில் மக்கள் அனைவரும் பயமின்றி இரவு நேரங்களில் நடமாடுவதைப் பார்க்க முடிகிறது.எனக்கும், என் குடும்பத்தாருக்கும் இப்போது வெளியில் நடமாடுவதில் பிரச்சனையோ, பயமோ இல்லை என்றார்.

அதாவது டெல்லியிலுள்ள 14 மில்லியன் மக்கள் மற்றும் டெல்லியின் அருகிலுள்ள காசியாபாத் மக்களையும்அச்சுறுத்தி வந்த குரங்கு மனிதன் போலீஸார் கண்ணில் படாமலேயே தப்பித்து விட்டான் என்று கூறலாம்.

டெல்லி மக்களும் குரங்கு மனிதன் பீதியிலிருந்து விடுபட்டு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர்.

இருப்பினும் டெல்லியிலுள்ள சில கிராமங்களில் குரங்கு மனிதன் அச்சம் இன்னும் போகவில்லை. அங்குள்ளமக்கள் குரங்கு மனிதன் 46 பேரைத் தாக்கி விட்டு பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக்கூறுகின்றனர். இதையடுத்து இப்பகுதி முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கிழக்குப்பகுதி துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் லால் கூறுகையில், தற்போது குரங்கு மனிதன்பீதியிலிருந்து டெல்லி மக்கள் விடுபட்டு விட்டனர். குரங்கு மனிதன் என்ற பேச்சே எங்கும் இல்லை.

குரங்கு மனிதன் தொல்லை உருவானதிலிருந்து போலீஸார் அனைவரும் உஷார் படுத்தப்பட்டு விட்டனர்.போலீஸாரின் தீவிர கண்காணிப்பால் குரங்கு மனிதன் காணாமல் போய்விட்டான்.

இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும், சாத்தான், ஆவி போன்ற மாயஜால சக்திகளில் மூட நம்பிக்கைகொண்டவர்கள். எதையும் எளிதில் நம்பி விடுபவர்கள். அதனால் குரங்கு மனிதன் என்பது கூட வெறும்வதந்தியாக இருக்கலாம்.

குரங்கு மனிதனை பிடிப்பதற்காக டெல்லி போலீஸார் மேற்கொண்ட பணிகள் எல்லாம் வீணான வேலைகள்.இருப்பினும் பொதுமக்களை சமூகவிரோத கும்பலிடமிருந்து காப்பாற்றுவது போலீஸாரின் வேலை என்பதால்போலீஸார் தங்கள் பணிகளைத் திறமையாகச் செய்தனர்.

குரங்கு மனிதன் உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு தப்பித்து விட்டதாகவும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த மாநிலங்களுக்குச் சென்றுள்ள குரங்கு மனிதன் அங்கு குழந்தைகளைக் கடத்தி பணம்பறித்து வருவதாகவும் வதந்தி கிளம்பியுள்ளது என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X