For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த குறி கோவை?

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திமுகவிற்கு எதிராக ஊழல் புகார்களைக் கிளப்ப வேண்டும் என தீவிர முயற்சியில் அதிமுக விரித்த வலைவிரிகிறது. விரைவில் கோவை மாவட்டத்தில் பலர் இதில் மாட்டிக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் "பழிக்குப் பழி வாங்கும் நிகழ்வாக திமுகவையும் ஊழலில் மாட்டி அதன் பெயரை ஊழலின்சின்னமாக மாற்ற வேண்டும் என்ற துடிப்பில் அதிமுகவினர் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இதற்கான அதிரடி நடவடிக்கைகைகள் இப்போதே தொடங்கி விட்டது. அடிமட்டத்திலிருந்து தொடங்கி, மேல்மட்டம் வரை என்னென்ன ஊழல்களை வெளிக் கொணர முடியும் என்பதில் அதிமுகவினர் தீவிர கவனம்செலுத்த முடிவு செய்துள்ளனர். சட்டசபை முடிந்ததும் ஒவ்வொரு அதிமுக எம்.எல்.ஏ.வும் இதில் தீவிர கவனம்செலுத்துவர் எனத் தெரிகிறது.

அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயராமன், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு அதிகாரிகளை காரசாரமான முறையில் இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்களின் மேல் அதிகாரியை அழைத்து, "நீங்களாக எங்கெங்கு எப்படி கூட்டுறவில் ஊழல்நடந்துள்ளது எனச் சொல்லி விடுங்கள், நாங்களாகக் கண்டுபிடித்தால், பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என பகிரங்கமாகவே தெரிவித்தார். இதையடுத்து ஒவ்வொரு துறையிலும் என்னென்ன ஊழல்கள்நடந்துள்ளது என்பதை வெளிக் கொணரும் முயற்சியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகம் முழுவதும் திமுகவினரின் வசமே இருந்தது.இதில் குறிப்பிடத்தக்கது, கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினருமாகஇருந்த சி.டி தண்டபாணி மீது அதிமுகவினரின் முதல் பார்வை விழுந்துள்ளது.

இவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கோவை சிங்காநல்லூரில் ஒரு பெரிய அடுக்குமாடி வீடுகளைக் கட்டியுள்ளார்.இந்த அடுக்குமாடிக் கட்டடங்கள் கூட்டுறவு மூலம் கட்டப்பட்டது என்றாலும், "கோயம்புத்தூர் நகர வளர்ச்சிமேம்பாட்டுத் திட்டம் என்ற பொருளில் "கோயம்புத்தூர் டவுன் டெவலப்மென்ட் (சிடிடி) எனப் பெயர்வைக்கப்பட்டது.

சுருக்கமாக சிடிடி என்கிளேவ் என அழைக்கப்படுகிறது. இதில், சி.டி. டி என்பது சி.டி.தண்டபாணியையும்மறைமுகமாக குறிக்கும் என அதிமுகவினர் கருதுகின்றனர். எனவே, இத்திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடிநடந்திருக்கலாம் எனக் கருதி இதனைத் தீவிரமாக அதிமுகவினர் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதே போன்று அமைச்சராக இருந்த பொங்கலூர் பழனிச்சாமிக்குத் தொடர்புடையதாக கூறப்படும் ஒரு சினிமாதியேட்டர் மீதும் அவர்களின் பார்வை திரும்பியுள்ளது.

அமைச்சர் பழனிச்சாமிக்குப் பினாமியாக நிறைய சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர். அமைச்சர்பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருந்த மாவட்ட கலெக்டர் சந்தானத்தையும் இதில் இணைத்து அவர்கள் புகார்தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட கலெக்டர் சந்தானம், திமுக அமைச்சர் ஒருவருக்கு நெருங்கியவர் என்ற நிலையில், அவரை இந்தமாவட்டத்தை விட்டு மாற்றும் முயற்சி விரைவாக நடந்து வருகிறது.

இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தானம் எந்த நேரத்திலும் தனுக்கு மாறுதல் வரலாம் எனக் கருதி மூட்டைமுடிச்சுகளுடன் தயாராகி விட்டார். மேலும், கோவையில் இவர் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி விட்டார்.எனவே முறைப்படி மாறுதலும் இவருக்குத் தயாராக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தென்னைக்கு பெயர் போன பொள்ளாச்சி நகரம் இங்கு தான் உள்ளது. தென்னை விவசாயம், அதிகமுள்ளஇந்தப் பகுதியில் விவசாயிகள் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகினர்.

உள்ளூர் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அரசு அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டியமானியத்தை சுருட்டிக் கொண்டனர் என்பதே முக்கிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்த கொப்பாரைத் தேங்காய் ஊழல் வெட்ட வெளிச்சமாகவே நடந்த ஒன்று என்பதால் பொதுமக்களிடையேதிமுக அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது. இதுவும் இந்தப் பகுதியில் திமுக வீழ்ச்சிக் காரணமாக அமைந்தது.

இதே போன்று பல்வேறு திட்டங்களைத் தோண்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் களமிறங்குகின்றனர். சட்டசபைத்தொடர் முடிந்தவுடன் இது தான் அவர்களுக்கு இடப்பட்ட முதல் பணியாக செயலாற்றவுள்ளனர்.

அரசு அதிகாரிகள் இவர்களைக் காண்பதற்கு முன்பே கலக்கத்தில் மூழ்கத் தொடங்கி விட்டனர். யாருக்கு எந்தஊருக்கு மாறுதல் எனப் புரியாமல் எந்த நேரத்திலும் மூட்டை முடிச்சுகளுடன் அதிகாரிகள் தயார் நிலையில்உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X