சிறுதொழில் முதலீட்டை உயர்த்த கோரிக்கை
கவிஞர் வைரமுத்து பாடிய கவிதை:
வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் குறைந்த
காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது
அது மேலும் புயலாக வலுப்பெற்று
கோபாலபுரத்திற்கும், வேளச்சேரிக்கும்
மத்தியில் மையம் கொள்ளலாம்.
பின், மேற்கு, தென் மேற்கு
திசையில் நகர்ந்து தேனாம்பேட்டையில்
கரையைக் கடக்கலாம்
அதனால் அறிவாலயத்தில்
கனத்த இடியுடன் மழை பெய்யக் கூடும்.
சற்று முன் கிடைத்த செய்தி
அறிவாலயத் தலைவரின் அறிவிப்பு
யாரும் அஞ்சத் தேவையில்லை
அறிவாலயத்தை அசைக்க முடியாது
ஈரோட்டு அஸ்திவாரத்தில்
காஞ்சிபுரம் கலவையில்
திருவாரூர் சிற்பியால்
கட்டப்பட்டது அறிவாலயம்
மக்கள் உனக்கு பதவியைக் கொடுக்கிறார்கள்
பின் எடுக்கிறார்கள்.
நீ தமிழ்நாட்டின் சுவாசம் அதனால்
மீண்டும் கொடுப்பார்கள் - இல்லாவிட்டால் மடிவார்கள்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை நிரந்தரமல்ல
அறிவாலயம்தான் நிரந்தரக் கோட்டை
அண்ணா சொன்னார்
கொள்கை வேஷ்டி
பதவி துண்டு என்று
துண்டை நீ சலவைக்குப் போட்டிருக்கிறாய்
அது ஆர்டினரியா? அர்ஜெண்டா?
ஆர்டினரிஎன்றால் 5 வருடம்
அர்ஜெண்ட் என்றால் அடுத்த வருடம்
பாலற்றுப் போனாலும்
தாய் தாய்தான்
பதவியற்றுப் போனாலும்
நீ நீதான்.
எழுதி எழுதி விரல்கள் தேய்ந்து விட்டது என்றால்
சூரிய விரல்கள் தேயுமா?
எழுது எழுதிக் கொண்டே இரு.
உழைப்பதற்கென்றே பிறந்தவன் நீ
பேசி பேசி குரல் கம்மி விட்டதென்றால்
அலையின் சொற்பொழிவு என்றாவது அடங்குமா?
நீ பேசு.
நாங்கள் கலங்கினோம்
நீ இதுதான் எனது கடைசித் தேர்தல் என்றபோது.
உனக்கு ஏது கடைசித் தேர்தல்?
ஆகாயத்தின் கடைசியைக் காட்டு
கடலின் கடைசியைக் காட்டு
சூரியன் சொல்லலாம் நாளை தோன்ற மாட்டேன் என்று
கிழக்குக்கு இடுப்பு வலியெடுத்தால்
சூரியன் தோன்றாமல் இருக்குமா?
சிலரது வெற்றிக்குக் கூட விலாசம் இல்லை.
உனது தோல்விக்குக் கூட வரலாறு இருக்கிறது
உழைக்கப் பிறந்தவன் நீ
தலைவனாக இருந்தால் உன்னைப் போல இருக்க வேண்டும்
உயிரையே கொடுக்கும் தொண்டன் உண்டு உனக்கு
உன் வேகம்
உன் விவேகம்
வெல்லட்டும்
காலம் உன் கையில் வரும்
என்று பாடினார் வைரமுத்து.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!