For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோல்விக்கு நீ தான் காரணம்: மாறன்-வீராசாமி கடும் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கருணாநிதியின் மருமகனும் மத்தியஅமைச்சருமான முரசொலி மாறனுக்கும் மாஜி மந்திரியும் கருணாநிதியின் வலது கரமுமான ஆற்காடு வீரசாமிக்கும்இடையே கடும் மோதல் நடந்தது.

தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்று நடந்த விவாதம் மோதலாக மாறியது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்விக்குப் பின் நடந்த முதல் பொதுக் குழுக் கூட்டம்இது.

தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வி, திமுகவினர் மீதான போலீஸ் நடவடிக்கை, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்விவகாரங்கள் தோண்டியெடுப்பு, ஸ்டாலின் மீதான பாலங்கள் ஊழல், கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்என பெரும் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் கூடியது.

வழக்கத்துக்கு மாறாக மிக சோகத்துடன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள். கூட்டத்தில் சுரத்து இல்லை.

ஆனால், அனல் பறந்தது.

முதலில் பேசிய மத்திய மந்திரி முரசொலி மாறன் தான் வெடியை கொளுத்திப் போட்டார்.

அவர் பேசுகையில், கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்து கொண்டிருக்கும் ஆற்காடு வீராசாமியும்துரைமுருகனும் கட்சியின் பலம் குறித்தும், யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் கருணாநிதிக்கு தவறானதகவல்களைத் தந்துவிட்டனர் என விஷம் கக்கினார்.

இதை சற்றும் எதிர்பாராத ஆற்காடு வீரசாமி பெரும் அதிர்ச்சியடைந்தார். ஆனாலும் சமாளித்துக் கொண்டுபேசினார். நீங்கள் (மாறன்) தான் உங்கள் மாமாவின் (கருணாநிதியின்) வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறீர்கள்.நானும் துரைமுருகனும் கருணாநிதியின் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். நீங்கள் கருணாநிதிக்குநல்ல புத்திமதியும், ஆலோசனையும் தந்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு எங்கள் மீது பாய்வது சரியல்ல.

அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் நீங்கள் கட்சிப் பணிகளில் கொஞ்சம் கூட நாட்டம் காட்டவில்லை. ஏனோதானேஎன்று தான் இருந்தீர்கள் என காட்டமாக பதில் தந்தார் வீராசாமி.

இதை கருணாநிதியும் பிற பொதுக் குழு உறுப்பினர்களும் மிக அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மாறன்வீராசாமியை முறைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் பேசிய முரசொலி மாறன் மூத்த தலைவர்கள் விலகிக் கொள்ளுங்கள் என்ற தொனியில் பேசினார். சட்டசபைஎதிர்க் கட்சித் தலைவராக உள்ள அன்பழகன் கொஞ்சம் விலகிக் கொண்டு பரிதி இளம்வழுதி போன்றவர்களுக்குவிவாதங்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுரை கூற அன்பழகன் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X