For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேட்ச் பிக்சிங்கில் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு: சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் குறித்து விசாரணை செய்து வரும் சி.பி.ஐ. துபாய் மற்றும் பாகிஸ்தானில் இருக்கும்கடத்தல்காரர்கள்தான் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என கூறியுள்ளனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் குறித்த விசாரணை இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையை சமர்பித்தபின் துவங்கியது. விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. பல ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் நல்ல வருவாய் கிடைக்கிறது என உணர்ந்து கொண்ட கடத்தல்காரர்கள் இதற்கெனதனி குழுவை அமைத்து இதில் ஈடுபட வைத்துள்ளார்கள். இந்த கடத்தல்காரர்கள் பலரும் இந்திய கிரிக்கெட்வீர்ரகளுடனும், நிர்வாகிகளுடனும் மற்றும் அதிகாரிகளுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளனர்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படும் கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் பல விவரங்கள் கிடைத்துள்ளது. ஆனால்இது குறித்த விவரத்தை வெளியிட இயலாது. ஏனென்றால் இது எங்களது விசாரணையை பாதிக்கக் கூடும்.தேவையான சமயத்தில் அதை நாங்கள் வெளியிடுவோம்.

விசாரணை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் யார் யாருக்கு எதிரான விவரங்கள் எங்களுக்குகிடைத்திருக்கிறது என நாங்கள் கூறுவது சரியல்ல.

டெல்லி மற்றும் மும்பை போலீஸ் உதவியுடன் கடத்தல்காரர்கள் எங்கிருந்து செயல் படுகிறார்கள் என்பதையும்கண்டறிய உள்ளோம்.

ஐக்கிய அரபு குடியரசு, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு அங்கு நடந்தவிளையாட்டு போட்டிகளில் கடத்தல்காரர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பது குறித்தவிவரங்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

கடத்தல்காரர்கள் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் காட்டி வரும் ஆர்வம் நாட்டின் பாதுகாப்புக்குஊறுவிளைவிக்க கூடும் என கூறினர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் முகமது அசாருதீன் உள்ளிட்ட பலருக்கு கடத்தல்காரர்களுடன்தொடர்பு இருப்பது சி.பி.ஐயால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐ. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மேட்ச் பிக்சிங் குறித்து 162 பக்க அறிக்கை ஒன்றை சமர்பித்தது.கடும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கிரிக்கெட் விளையாட்டு முழுவதும் கடத்தல்காரர்களின்கட்டுப்பாட்டுக்குள் போய் விடும் என அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

முகமது அசாருதீன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிசியோதெரபி பயிற்சியாளர் அலி இரானிஆகியோர் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்கில் மாபியா கும்பலைச் சேர்ந்த அனீஸ் இப்ராஹீம், அபு சலீம் மற்றும் ஷரத்ஷெட்டி ஆகியோர் ஈடுப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

அபு சலீம் பல முறை தன்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங் குறித்து பேசியதாவும். மேட்ச்பிக்சிங்கில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தான் அனீஸ் இப்ராஹீமுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதால் அபுவுக்கு உதவ முடியாது என நான் கூறிவிட்டேன் எனவும் சி.பி.ஐயிடம் ஒப்புக் கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X