For Daily Alerts
செங்கோட்டையன் வழக்கு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான போக்குவரத்து ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 20ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராகஇருந்தவர் செங்கோட்டையன். அப்போது போக்குவரத்துத் துறையில் நடந்த பல்வேறு ஊழல்கள் தொடர்பாகசெங்கோட்டையன் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, தி.மு.க. ஆட்சிக்குப் பின் தடைபட்டது. தனி நீதிமன்ற வழக்கறிஞர் ராஜினாமா செய்துவிட்டதால் வழக்கு விசாரணை நின்றது. இன்னும் புதிய வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை. இதையடுத்துவிசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!