மாநகராட்சி கட்டிடத்தில் ஜெ.படம் வைக்கப்படுமா?
சென்னை:
சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படுமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்திமுடிவெடுக்கப்படும் என்று மேயர் ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. கூட்டத்தில் 102 தீர்மானங்களைஸ்டாலின் வாசித்தார்.
மக்கள் நலன் கருதி இந்தத் தீர்மானங்களை நிறை வேற்றியுள்ளதாகக் கூறினார். பின்னர் உடனடியாக கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன், எதிர்க்கட்சித் தலைவரும், தமாகா எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல்ஆகியோர் எங்களுக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் பேச அனுமதி தரவில்லை.
சென்னை நகரில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா கையாளும் முறைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், மாநகராட்சிக்கட்டிடத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்படுவது குறித்தும் கோரிக்க விடுக்க இருந்தோம்.
எங்களைப் பேச விடாமல் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டார் ஸ்டாலின். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதுபோன்ற செயலாகும் என்றனர்.
மாநகராட்சிக் கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 20 ம் தேதி மக்கள் நலன் கருதிமாநகராட்சிக் கூட்டத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றத் தீர்மானித்திருந்தோம்.
ஆனால் கூட்டத்தை நடத்தவிடாமல் எதிர்க்கட்சியினர் அவையில் கூச்சலிட்டனர். என்னை அலட்சியப்படுத்தியதற்காக நான்கவலைப்படவில்லை. அவையின் மரபுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து.
மாநகராட்சி கட்டிடத்தில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்படுவது குறித்து மாநகராட்சி உறுப்பினர்களுக்கு வாக்கெடுப்புநடத்தி முடிவெடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!