சன் செய்திகளில் ஜெ.வுக்குத் தடை
சென்னை:
சன் டிவியில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் சன் டிவி நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு பல மட்டங்களிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தநிலையில் பொய்யான வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டிருப்பாதகவும் அதைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா தொடர்பானசெய்திகளில் படங்கள் (விஷூவல்ஸ்) எதுவும் காட்டப்பட மாட்டாது என சன் டிவி முடிவு செய்துள்ளது.
சன் டிவி செய்திகளில் ஜெயலலிதா தொடர்பான செய்திகளில் வெறுமனே குரல் மூலம் மட்டுமே செய்திகள் ஒளிபரப்பாகின்றன.விஷூவல்ஸ் எதுவும் காட்டப்படுவதில்லை.
அதற்குப் பதிலாக சன் டிவி நிருபர் சுரேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கவேண்டும். கடமையைச் செய்ததற்கு சிறைதான் பரிசா? என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!