For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யானை காணிக்கை: நாளை குருவாயூர் செல்கிறார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

குருவாயூர்:

குருவாயூர் கோவிலுக்கு யானையைக் காணிக்கை வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமைகுருவாயூர் செல்கிறார்.

தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கா ஜெயலலிதா பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், யாகங்கள்நடத்தினார். அதுபோல, தேர்தலில் வெற்றி பெற்றால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாகவேண்டிக் கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றதால், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு யானையைக் காணிக்கையாகச் செலுத்தசனிக்கிழமை ஜெயலலிதா குருவாயூர் செல்கிறார்.

இது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே.என். சதீஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது:

சனிக்கிழமை காலை 7 மணியளவில் குருவாயூர் வரும் ஜெயலலிதா, 15 வயதான "கண்ணன்" என்ற யானையைக்குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார். இதற்கான சடங்குகள் எல்லாம் முடிந்துவிட்டன என்றார்.

கோவிலின் துணை நிர்வாக அதிகாரி கருணாகரன் கூறும்போது:

ஜெயலலிதா கோவிலுக்கு வருவதை முன்னிட்டு கோவிலில் இருக்கும் அனைத்து விளக்குகளுக்கும் நெய் ஊற்றிதீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 12 கிலோ நெய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குருவாயூர் மூலவரான கிருஷ்ணருக்கு கலாபசாத்து (சந்தன அலங்காரம்) செய்யவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கலாபசாத்து செய்ய 6 பந்து அளவு சந்தனம் தேவை. ஒவ்வொரு சந்தன பந்தின் விலையும்ரூ.300 ஆகும். இதேபோல் கோவிலில் இருக்கும் விக்னேஸ்வரர், சாஸ்தா மற்றும் பகவதிக்கும் ஒரு கலாபசாத்துசெய்யப்படுகிறது. இவற்றிற்கு ஒரு பந்து அளவு சந்தனம் போதுமானது.

கோவிலின் பராமரிப்பில் இருக்கும் 51 யானைகளுக்கும் அன்ன ஊட்டு என அழைக்கப்படும் யானைக்கு உணவுகொடுக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்ன ஊட்டுக்கு இதுவரை முன்பணம் எதுவும்கட்டப்படவில்லை. அன்ன ஊட்டுக்கு ரூ.4,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அன்ன ஊட்டுக்கு முன் கூட்டியே பணம் கட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. அன்றைய தினம் பணம்கட்டினாலே, மதியம் அன்ன ஊட்டுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் கருணாகரன்.

"கண்ணன்" கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டதும், புன்னத்தூர் கோட்டாவில் ஏற்கனவே கோவிலின்பராமரிப்பில் இருக்கும் யானைகளுடன் 52வது யானையாக சேரும்.

ஜெயலலிதாவுக்கு "இசட் பிரிவு பாதுகாப்பு" கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் காவல்துறைஅதிகாரிகள் செய்துள்ளனர்.

ஜெயலலிதா வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஏதாவது வரைமுறை விதிக்கப்படுமா என்பதுபின்னர்தான் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X