"கோடீஸ்வரன்" அரங்கை பிரிக்க உத்தரவிடவில்லை: தமிழக அரசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சன் டி.வியில் இடம்பெறும் "கோடீஸ்வரன்" நிகழ்ச்சிக்கான அரங்கை பிரிக்குமாறு அரசு உத்தரவிடவில்லை எனதமிழக அரசு தெரிவித்துளள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"கோடீஸ்வரன்" அரங்கைப் பிரிக்குமாறு எந்த உத்தரவையும் அரசு பிறக்கவில்லை. அவர்களாகவே காலி செய்துவிட்டனர்.

ராடன் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவத்தினர் "கோடீஸ்வரன்" நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு எம்.ஜி.ஆர். பிலிம்சிட்டியில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் தொடங்கியது.

இந்த நிகழ்சிச்சியை ஒளிப்பதிவு செய்வதற்கு 6 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி அனுமதிசென்ற மார்ச் மாதம் 25ம் தேதி இது முடிவுக்கு வந்தது.

ஆனால் அதன் பின்பும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. கால நீட்டிப்பு கேட்டு கடிதம் கூட அந்தநிறுவனத்தினரிடம் இருந்து வரவில்லை.

இந்நிலையில், ராடன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன் ராதா சென்ற மே மாதம் 23ம் தேதி கடிதம்ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தற்போதுள்ள பணிகளை சுட்டிக்காட்டி ஜூன் 10ம் தேதி வரைபடப்பிடிப்பு நடக்கும் என்றும், அதன் பின்பு படப்பிடிப்பு நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாகவும் அவர்தெரிவித்திருந்தார்.

கடிதத்தில் குறிப்பிட்டபடி, ஜூன் 10ம் தேதி படப்பிடிப்பை முடித்துக் கொள்ளும்படி தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிகழகத்தினர் கூறினர்.

மேலும் அவர்களாகவே அரங்கை பிரித்துக் கொள்வதற்கு ஜூன் மாதம் 19ம் தேதி வரை அனுமதியும்வழங்கப்பட்டது. எனவே அரங்கைப் பிரிக்குமாறு அரசு உத்தரவிடவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற