சீனாவில் சுரங்க விபத்து - 92 பேர் பலி
பீஜிங்:
கிழக்கு சீனாவில் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 92 பேர்பலியானார்கள். இறந்தவர்களில், 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 42 பேர் நிலைமை தெரியவில்லை. அந்தச் சுரங்கத்தில் நிலவும் வெப்பத்தில் அவர்கள் இதுவரைஉயிருடன் இருப்பதற்கான சாத்தியக் கூறு இல்லை என்று சொல்லப் படுகிறது.
கடந்த ஜூன் 15-ந்தேதி பாதுகாப்பு வசதியில்லாததால் அந்தச் சுரங்கத்தை மூடச் சொல்லப்பட்டிருந்தது. அதையும்மீறத் திறந்து வைத்ததால் இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சுரங்கத்தின் காண்டிராக்டர் ஜாங்ஜின்காயை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இதுபோல் இயங்கும் 100 சிறிய சுரங்கங்களை பாதுகாப்புக் கருதி மூடச்சொல்லி, நகர நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சீனாவில் 1000 பேர் சுரங்க விபத்துகளில் இறக்கிறார்கள் என்று சொல்லப் படுகிறது.
இதுபற்றி அந்தக் கிராமவாசி ஒருவர் கூறுகையில், இதுமாதிரியான சுரங்கங்கள் அதிகாரிகள் வரும்போது மட்டும்மூடப்பட்டு இருக்கும். அவர்கள் சென்றதும் மீண்டும் திறந்து வைக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!