மேலும் 17 தமிழக மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம்:
இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 17 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசிடம்வேண்டுகோள் விடுத்து வந்தனர். இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் தொடர்ந்து இலங்கைஅரசிடம் இவர்களுடைய விடுதலை பற்றிப் பேசினர்.
இதன் விளைவாக, சிறிது சிறிதாக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, 22மீனவர்கள் கடந்த 10ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 23ம் தேதி மேலும் 16 தமிழக மீனவர்களைவிடுவித்தது இலங்கை அரசு.
அந்த வகையில், தற்போது மேலும் 17 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்துக்கு வந்துசேர்ந்த இந்த 17 தமிழக மீனவர்களையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட முக்கிய அதிகாரிகள்வரவேற்றனர்.
பின்னர் அந்த மீனவர்கள், அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அனுராதபுரம் சிறையில்தாங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு தங்களுக்கு உணவு, தண்ணீர் சரியாக அளிக்கப்படவில்லை என்றும்அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடுதலையை அடுத்து, இன்னும் 11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் என்பதுதெரிகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!